சஞ்சய் ராவத்துக்கு 15 நாட்கள் சிறை: பாஜக நிர்வாகியின் மனைவி தொடர்ந்த அவதூறு வழக்கில் தீர்ப்பு!


மும்பை: பாஜக நிர்வாகியின் மனைவி தொடர்ந்த அவதூறு வழக்கில் மாநிலங்களவை எம்.பி.யும், சிவசேனா (யுபிடி) மூத்த தலைவருமான சஞ்சய் ராவத்துக்கு 15 நாட்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது

பாஜக தலைவர் கிரித் சோமையாவின் மனைவி டாக்டர் மேதா கிரித் சோமையாவின் புகாரின் பேரில் பதிவு செய்யப்பட்ட வழக்கில் மும்பை மஸ்கானில் உள்ள பெருநகர மாஜிஸ்திரேட், சஞ்சய் ராவத்துக்கு 15 நாள் சிறை தண்டனையும், ரூ.25,000 அபராதமும் விதித்து உத்தரவிட்டுள்ளார்.

மீரா பயந்தரில் பொதுக் கழிப்பறைகளைக் கட்டுவது மற்றும் பராமரிப்பதில் தானும், தனது கணவரும் ரூ.100 கோடி ஊழலில் ஈடுபட்டதாக ஆதாரமற்ற, அவதூறான குற்றச்சாட்டுகளை சஞ்சய் ராவத் தெரிவித்ததாக, மேதா சோமையா அவதூறு வழக்கு தொடர்ந்திருந்தார்.

அந்த புகாரில், "சஞ்சய் ராவத் ஊடகங்களுக்கு அளித்த அறிக்கைகள் அவதூறானவை. பொது மக்களின் பார்வையில் எனது நன்மதிப்பை கெடுக்கும் வகையில் இந்த கருத்துகள் வெளியிடப்பட்டுள்ளன" என்று கூறப்பட்டுள்ளது.

x