கர்நாடகாவில் வயதான தனது மாமியாரை இழுத்துச் சென்று குப்பைத் தொட்டியில் மருமகள் வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடகா மாநிலம், சிக்கபள்ளாபூர் மாவட்டத்தில் தான் இந்த கொடூரச் சம்பவம் நேற்று நடைபெற்றுள்ளது. வயதான பெற்றோரை முதியோர் இல்லத்தில் சேர்க்கும் பல குழந்தைகள் உள்ளனர். மேலும், மாமியாரை தாக்கும் மருமகள் என அவ்வப்போது செய்திகளும் வருகின்றன. ஆனால், 80 வயதான தனது மாமியாரை வீட்டு வாசலில் இருந்து தரதரவென இழுத்துச் சென்று குப்பைக் கிடங்கில் மருமகள் வீசியெறிந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஷிட்லகட்டா தாலுகாவின் கொண்டப்பகரிபள்ளி கிராமத்தைச் சேர்ந்த வெங்கடலட்சுமம்மா(8)) என்ற மூதாட்டி தனது வீட்டின் முன் உறங்கிக் கொண்டிருந்தார். அப்போது அவரது மருமகள் லட்சுமிதேவம்மா என்பவர், தனது மாமியார் வெங்கடலட்சுமம்மாவை தரதரவென்று இழுத்துச் சென்று குப்பைக் கிடங்கில் வீசியெறிந்துள்ளார். அப்போது அவரை தாக்கியும் உள்ளார்.
இந்த சம்பவத்தைப் பார்த்த அப்பகுதி பொதுமக்கள், லட்சுமிதேவம்மாவை கண்டித்துள்ளனர். இதுகுறித்து புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வயதான மூதாட்டியை குப்பைக் கிடங்கில் வீசிய மருமகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேணடும் என்ற கோரிக்கையும எழுந்துள்ளது. வயதான முதியவர்களிடம் காட்ட வேண்டிய பரிவைக் கூட செய்யாமல், மனிதாபிமானமற்ற முறையில் மருமகள் நடந்து கொண்ட சம்பவம் ஷிட்லகட்டா தாலுகாவில் பேசுபொருளாக மாறியுள்ளது.
இதையும் வாசிக்கலாமே...
வரலாற்றில் உச்சம்... ரூ.51,000யைக் கடந்தது சவரன் விலை... ஒரே நாளில் ரூ.1,120 உயர்வு!
தேவாலய ஆராதனைக்குச் சென்றபோது ஆற்றுக்குள் கவிழ்ந்த பேருந்து... 45 பேர் பலியான பரிதாபம்!