அரசியல் ஆதாயத்துக்காக சந்திரபாபு பொய் நாடகம்: பிரதமர் மோடிக்கு ஜெகன்மோகன் கடிதம்


அமராவதி: அரசியல் ஆதாயத்துக்காக திருப்பதி லட்டு பிரசாதத்தில் சந்திரபாபு நாயுடு பொய் குற்றச்சாட்டை சுமத்துகிறார். இது தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் என்றுமுன்னாள் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி உள்ளார்.

கடந்த ஆட்சிக் காலத்தில் திருப்பதியில் பக்தர்களுக்கு வழங்கப்பட்ட லட்டு பிரசாதத்தில் விலங்குகளின் கொழுப்பு கலந்திருப்பதாக ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுகுற்றம் சாட்டியிருப்பது நாடுமுழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த சூழலில்முன்னாள் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி, பிரதமர் நரேந்திர மோடிக்கு எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:

அரசியல் சுய லாபத்துக்காக ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி மீது வீண் பழியை சுமத்த சந்திரபாபு நாயுடு திருப்பதி தேவஸ்தான லட்டுபிரசாத பிரச்சினையை கொண்டுவந்துள்ளார். மிகவும் சென்டிமெண்டான இந்த விவகாரத்தால், பல கோடி பக்தர்கள் மனம் புண்படும்படி அவர் நடந்து கொண்டு வருகிறார். இது முதல்வரின் பதவிக்கே இழுக்காகும்.

திருமலைக்கு பல ஆண்டுகளாக டேங்கர்களில் நெய் கொண்டு வரப்படுகிறது. அந்த டேங்கர்கள், திருப்பதியிலேயே மாதிரி எடுத்து, அதில் தரமான நெய் இருப்பதாக சான்றிதழ் வழங்கிய பின்னரே மலைக்கு கொண்டு செல்ல அனுமதிக்கப்படும். குறிப்பிட்ட டேங்கரில் இருந்த நெய்தரமற்று இருந்ததால் திருப்பிஅனுப்பப்பட்டது. இதனை திருமலைக்கு அனுமதிக்கவில்லை.

அப்படி இருக்கையில் நெய்யில் கலப்படம் எப்படி நடந்திருக்கும். அதற்கு நாங்கள் எப்படிபொறுப்பேற்க முடியும்? இது அரசியல் ஆதாயத்துக்காக சந்திரபாபு நாயுடு நடத்தும் பொய் நாடகமாகும். இது பல கோடி மக்களின் பிரச்சினை ஆகும். சந்திரபாபு கூறும் அறங்காவலர் குழுவில்பாஜகவை சேர்ந்த உறுப்பினர்களும் உள்ளனர். இது போன்றதவறுகள் நடக்காது, நடந்ததும் இல்லை. இது தொடர்பாக விசாரணை நடத்தி உண்மையை வெளி உலகத்துக்கு தெரியப்படுத்த வேண்டும். இவ்வாறு ஜெகன் மோகன் கடிதத்தில் குறிப்பிட்டு உள்ளார்

x