மதம் மாறி திருமணம் செய்த மகளை அடித்துக்கொன்ற பெற்றோர்: ஆந்திராவில் பயங்கரம்


ஆந்திரப் பிரதேசம்: நெல்லூரில் மதம் மாறி கலப்புத் திருமணம் செய்த பெண் குடும்பத்தாரால் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது.

நெல்லூர் மாவட்டம், கொடவலூர் மண்டலம், வத்மநாபசத்திரம் பல்லேபாலத்தைச் சேர்ந்த ஷ்ரவாணி, இவர் முதல் கணவரை விவாகரத்து செய்துவிட்டு பெற்றோருடன் வாழ்ந்து வந்துள்ளார். இதனையடுத்து அவர் அல்லூர் மண்டலம் வடக்கு அமுலூரைச் சேர்ந்த பெயிண்டரான ரப்பானி என்பவரை காதலித்து வந்தார். மதம் காரணமாக இரண்டு குடும்பத்திலும் எதிர்ப்புகள் எழுந்தது. ஆனால், இருவரும் தனது குடும்பத்தினரின் விருப்பத்திற்கு மாறாக திருமணம் செய்து கொண்டு ஒன்றாக வாழத் தொடங்கினர்.

இதனையடுத்து சமாதானம் செய்வதாக பொய் சொல்லி ஷ்ரவாணியை தங்கள் வீட்டிற்கு அழைத்த அவரின் பெற்றோர், வீட்டிற்கு வந்தவுடன் கொடூரமான சித்திரவதைக்கு உட்படுத்தினர். ஷ்ரவாணியின் பெற்றோர், சகோதரி மற்றும் சகோதரர் அவரை அடித்து ரப்பானியை விட்டு பிரிந்து, தங்கள் சொந்த சமூகத்தைச் சேர்ந்த ஒருவரை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று வற்புறுத்தினார்கள்.

கடுமையான உடல் மற்றும் மன உளைச்சலுக்கு ஆளான போதிலும், ஷ்ரவானி தனது கணவரை கைவிட மறுத்துவிட்டார். அதனால் அவர்கள் ஷ்ரவாணியை அடித்தேக் கொன்றனர். இந்தக் குற்றத்தை மறைக்க, அவர்கள் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் அவரது உடலை வீட்டின் அருகே புதைத்தனர். ரப்பாணியும், ஷ்ரவாணி தற்கொலை செய்துகொண்டதாக நம்பினார்.

ஆனால், ஷ்ரவாணியின் பெற்றோரின் விசித்திரமான நடத்தையை கவனித்த ரப்பாணி, கிட்டத்தட்ட ஒரு மாதத்திற்கு பிறகு போலீசில் புகார் செய்தார். விசாரணையில், அதிகாரிகள் உண்மையை வெளிக்கொண்டு வந்து, ஷ்ரவணியின் பெற்றோரை கைது செய்தனர். கொலை செய்ததை ஒப்புக்கொண்ட அவர்கள், குற்றத்தை மறைக்க அவரது உடலை எப்படி புதைத்தார்கள் என்பதை விவரமாகத் தெரிவித்தனர்.

கொலையில் ஈடுபட்ட ஷ்ரவணியின் சகோதரன் மற்றும் சகோதரி தற்போது தலைமறைவாக உள்ளனர். அதே நேரத்தில் உடலை அடக்கம் செய்ய உதவிய பக்கத்து வீட்டுக்காரர் செஞ்சய்யா மீதும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

x