மதரஸாக்கள் பயங்கரவாதத்தை வளர்க்கிறது: மத்திய அமைச்சர் சர்ச்சை பேச்சு


கரீம் நகர்: மதரஸாக்கள் தீவிரவாதத்தை வளர்ப்பதாகவும், தேசிய பாதுகாப்புக்கு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்துவதாகவும் குற்றம்சாட்டி மத்திய அமைச்சரும், பாஜக தலைவருமான பண்டி சஞ்சய் குமார் சர்ச்சையை கிளப்பியுள்ளார்.

தெலங்கானா மாநிலம் கரீம்நகர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீ வித்யாரண்ய அவசா வித்யாலயத்தில் பெண்களுக்கான புதிய தங்கும் விடுதியை திறந்து வைத்து உரையாற்றும் போது பேசிய மத்திய அமைச்சர் பண்டி சஞ்சய் குமார், “ மதரஸாக்கள் தங்கள் மாணவர்களுக்கு துடைப்பம் மூலம் ஏகே 47 துப்பாக்கிகளை தயாரிப்பதில் பயிற்சி அளிக்கிறது. ஹைதராபாத், சித்திப்பேட்டை அல்லது கரீம் நகர் போன்ற இடங்களில் சில மதரஸாக்கள் தங்கள் மாணவர்களுக்கு 10 முதல் 100 ரூபாய் வரை சிறிய தொகையை வழங்குவதாகக் கூறப்படுகிறது.

ஆனால் இந்த மதரஸாக்களின் உள்ளே என்ன நடக்கிறது?. உலகில் தவறு செய்பவர்கள், 'கெட்டவர்கள்' என்று அழைக்கப்படுபவர்கள் பலரை பார்த்தால், இதுபோன்ற விஷயங்களை அவர்கள் எங்கிருந்து கற்றுக்கொண்டார்கள் என்று கேட்டால், பலர் மதரஸாவை சுட்டிக்காட்டுவார்கள். அமெரிக்கா, மும்பை அல்லது லண்டனில் வெடிகுண்டு வெடித்தாலும், இதுபோன்ற நிறுவனங்களின் போதனைகளுக்கு அதில் தொடர்பு இருக்கும்.

ஆனால் இன்னும், அரசாங்கம் என்ன செய்கிறது? இதை நிவர்த்தி செய்வதற்குப் பதிலாக, புதிய தொழில்நுட்பங்கள் மற்றும் கல்வித் திட்டங்களை உருவாக்குகிறோம் என்ற போர்வையில் இந்த மதரஸாக்களுக்கு நிதி வழங்குகிறது," என்று அவர் கூறினார். அவரின் இந்த கருத்துகள் தற்போது தெலங்கானாவில் சர்ச்சையை உருவாக்கியுள்ளது.

x