வாடிக்கையாளர்களுக்கு இன்று தான் கடைசி நாள்... பஞ்சாப் வங்கி எச்சரிக்கை!


பஞ்சாப் நேஷனல் வங்கி

பஞ்சாப் நேஷனல் வங்கி அதன் வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா

இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், ’ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதல்களின்படி, அனைத்து வாடிக்கையாளர்களும் தங்கள் கேஒய்சி (KYC) தொடர்பான தகவல்களைப் புதுப்பிக்க வேண்டியது அவசியம். பஞ்சாப் நேஷனல் வங்கியில் கணக்கு வைத்திருப்பவர்கள் தங்களுடைய கேஒய்சி விவரங்களை மார்ச் 19-ம் தேதியான இன்றுக்குள் அப்டேட் செய்ய வேண்டும். அப்படி செய்யவில்லை என்றால், அவர்களுடைய கணக்குத் தொடர்பான சேவைகள் பாதிக்கப்படலாம்.

கேஒய்சி விண்ணப்பம்

கேஒய்சி சரிபார்ப்பை முடிக்க வாடிக்கையாளர்கள் தங்கள் கிளைக்குச் சென்று அவர்களின் ஐடி, முகவரிச் சான்று, புகைப்படம், பான் கார்டு, வருமானச் சான்று, மொபைல் நம்பர் போன்றவற்றைப் பற்றிய தகவல்களை வழங்க வேண்டும். வாடிக்கையாளர்கள் நேரடியாகவோ அல்லது PNB ஆப் அல்லது இண்டர்நெட் பேங்கிங் மூலமாகவோ தங்களுடைய கேஒய்சி சரிபார்ப்பை முடிக்கலாம்.

மார்ச் 19ஆம் தேதிக்குள் உங்கள் கணக்கின் KYC சரிபார்ப்பை முடிக்கவில்லை என்றால், உங்கள் கணக்கு மூடப்படலாம். இதற்குப் பிறகு, கணக்கை ஆக்டிவேட் செய்ய நீங்கள் சிரமப்பட வேண்டியிருக்கும் எனக் குறிப்பிட்டுள்ளது.

இதையும் வாசிக்கலாமே...


ஷாக்... நடுக்கடலில் விழுந்து நொறுங்கிய இந்திய கடற்படை விமானம்!

x