சொன்னதைக் கேக்கல... 6 மாநில உள்துறை செயலாளர்களை அதிரடியாக மாற்றிய தேர்தல் ஆணையம்!


தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார்

தேர்தல் விதிகளின்படி 6 மாநில உள்துறை செயலாளர்களை தேர்தல் ஆணையம் அதிரடியாக பணியிட மாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளது.

தொடர்ச்சியாக மூன்றாண்டுகள் ஒரே இடத்தில் பணிபுரிபவர்கள், சொந்த மாவட்டத்தில் பணியாற்றும் அரசு அலுவலர்கள் மற்றும் அதிகாரிகள் தேர்தல் நேரத்தில், பணியிட மாற்றம் செய்யப்படுவது வழக்கம். அதன்படி, தேர்தல் தேதி அறிவிக்கப்படுவதற்கு முன்பே இந்த நடவடிக்கையை மேற்கொள்ள மாநில அரசுகளுக்கு தலைமை தேர்தல் ஆணையம் உத்தவிட்டிருந்தது.

எனினும், சில அதிகாரிகள் இந்த உத்தரவை பின்பற்றவில்லை என மாநில தலைமை செயலாளர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர். அதையடுத்து 6 மாநில உள்துறை செயலாளர்களை பணியிட மாற்றம் செய்து தேர்தல் ஆணையம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.

டெல்லியில் தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் தலைமையில் இன்று தேர்தல் நடத்தை தொடர்பாக ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

தேர்தல் ஆணையர்கள்

இந்தக் கூட்டத்திற்குப் பிறகு, குஜராத், உத்தரபிரதேசம், பீகார், ஜார்க்கண்ட், இமாச்சல பிரதேசம் மற்றும் உத்தராகண்ட் ஆகிய 6 மாநில உள்துறை செயலாளர்களை பணியிட மாற்றம் செய்து இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும், மிசோரம் மற்றும் இமாச்சலப் பிரதேசத்தில் பொது நிர்வாகத் துறை செயலாளரும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

மேற்கு வங்க காவல்துறை தலைமை இயக்குநரையும் பணியிட மாற்றம் செய்யத் தேவையான நடவடிக்கையையும் தேர்தல் ஆணையம் எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதேபோல், மும்பை மாநகராட்சி ஆணையர் இக்பால் சிங் சாஹல் மற்றும் கூடுதல் ஆணையர்கள் மற்றும் துணை ஆணையர்களையும் இந்திய தேர்தல் ஆணையம் பணியிட மாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளது.


இதையும் வாசிக்கலாமே...

x