இந்தியாவிலேயே முதன்முறையாக நீருக்கடியில் பயணிக்கும் மெட்ரோ ரயில் சேவை கொல்கத்தாவில் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வந்துள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி இந்த கடந்த மாதம் கொல்கத்தா நகரில் சில வழிதடங்களில் புதிய மெட்ரோ சேவையை தொடங்கிவைத்தார். அதில், இந்தியாவில் முதல் நீருக்கடியில் பயணிக்கும் மெட்ரோவும் ஒன்று. ஹவுரா மைதானம் முதல் எஸ்பிளனேட் பகுதி வரை உள்ள ஆற்றின் கீழ் பகுதியில் 30 மீட்டர் ஆழத்தில் இந்த மெட்ரோ பயணிக்கிறது. 520 மீட்டர் நீளம் கொண்ட சுரங்கப்பாதையின் கீழே மெட்ரோவில் 45 விநாடிகள் நீருக்கு அடியில் பயணிக்கலாம். இது குறைந்த நேரமே என்றாலும் நீருக்கடியில் மெட்ரோவில் செல்லும் அனுபவம் எப்படி இருக்கும் என்று பார்க்க பொதுமக்கள் மிகுந்த ஆர்வமுடன் இருந்துவந்தனர்.
இந்நிலையில், நீருக்கடியில் பயணிக்கும் மெட்ரோ ரயில் இன்று பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வந்தது. நீண்ட வரிசையில் காத்திருந்து பயணச்சீட்டு பெற்று பயணிகள் பயணம் செய்தனர். இது தொடர்பாக மெட்ரோ நிர்வாகம் தனது எக்ஸ் வலைதளத்தில், நீருக்கடியில் பயணிக்கும் மெட்ரோ ரயில் இன்று தனது சேவையை தொடங்கியதாக பதிவிட்டுள்ளது.
பயணிகள் நீருக்கடியில் பயணிக்கும் வீடியோவும் வெளியாகியுள்ளது. அதில் ’இந்தியாவின் முதல் நீருக்கடியில் மெட்ரோ ரயிலில் பயணம் செய்வதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன் ’ என்று பேசியுள்ளனர்.
இதையும் வாசிக்கலாமே....
'ஜீசஸ் கூடதான் குடிச்சிருக்காரு'... மது குறித்த கேள்விக்கு விஜய் ஆண்டனி பகீர் பதில்!
‘ஆமா! குடும்ப ஆட்சிதான்! தொண்டர்கள் உற்சாகம்... அதிர வைக்கும் திமுக!
மக்களவைத் தேர்தலில் போட்டியில்லை... பாஜகவுக்கு நிபந்தனையற்ற ஆதரவு... ஓபிஎஸ் திடீர் முடிவு!
கல்யாண வீட்டில் குத்தாட்டம் போட்ட ‘பிரேமலு’ நடிகை... வைரல் வீடியோ!