புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டங்களுக்கு ரூ.4.05 லட்சம் கோடியை வழங்குகிறது அதானி குழுமம்!


காந்திநகர்: 4வது உலகளாவிய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி முதலீட்டாளர்கள் சந்திப்பு மற்றும் எக்ஸ்போ - வில் (Renewable Energy Investors Meet & Expo - REInvest 2024) சூரிய, காற்று மற்றும் பசுமை ஹைட்ரஜன் போன்ற புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டங்களில் ரூ.4.05 லட்சம் கோடி முதலீடு செய்வதாக அதானி குழுமம் உறுதியளித்துள்ளது.

அதானி கிரீன் எனர்ஜி லிமிடெட் (AGEL) மற்றும் அதானி நியூ இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் (ANIL) ஆகிய இரண்டு நிறுவனங்களால் புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகத்திடம் இந்த உறுதிமொழி அளிக்கப்பட்டது.

இந்தியாவின் மிகப்பெரிய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி நிறுவனமான அதானி கிரீன் எனர்ஜி, 2030க்குள் 50 ஜிகாவாட் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திறனை அடையும் என உறுதிமொழி அளித்துள்ளது. இது தற்போது 11.2 ஜிகாவாட் செயல்பாட்டுத் திறனில் உள்ளது.

அதானி நியூ இண்டஸ்ட்ரீஸ் 10 ஜிகாவாட் சூரிய சக்தி உற்பத்தி ஆலையையும், 5 ஜிகாவாட் காற்றாலை உற்பத்தியையும், 10 ஜிகாவாட் பசுமை ஹைட்ரஜன் உற்பத்தியையும் மற்றும் 5 ஜிகாவாட் எலக்ட்ரோலைசர் உற்பத்தியை அமைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி ரூ.4.05 கோடி முதலீட்டில் 71,100 பேருக்கு வேலை வாய்ப்பு உருவாகும் எனவும் அதானி குழுமம் உறுதியளித்துள்ளது.

x