இந்தி பட ஷூட்டிங் நிறைவு: பார்ட்டியில் சாய் பல்லவி உற்சாக நடனம்; வைரலாகும் வீடியோ!


வைரலாகும் நடிகை சாய் பல்லவியின் டான்ஸ்

ஜப்பானில் இந்தி பட ஷூட்டிங் நிறைவு விழா பார்ட்டியில் நடிகை சாய் பல்லவி உற்சாகமாக நடனமாடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

நடிகை சாய் பல்லவி கடந்த 2015ம் ஆண்டு மலையாளத்தில் வெளிவந்த பிரேமம் திரைப்படம் மூலம் திரையுலகில் பிரபலமானார். அதைத் தொடர்ந்து மலையாளத்தில் 'களி' என்ற படத்தில் நடித்தார். பின்னர் தமிழ் திரையுலகிலும் பிரபலமான இவர், 2018ல் தியா படம் மூலமாக தமிழில் அறிமுகமாகமானார். இத்திரைப்படத்தினை தொடர்ந்து 'மாரி 2’, 'என்ஜிகே' போன்ற திரைப்படங்களிலும் நடித்துள்ளார். தென்னிந்திய சினிமாவை கடந்து இந்தி படங்களிலும் சாய் பல்லவி நடித்து வருகிறார்.

சாய் பல்லவி

தற்போது இந்தியில் நடிகர் அமீர் கானின் மூத்த மகன் ஜுனைத் கான் ஜோடியாக பெயரிடப்படாத ஒரு படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தின் ஷூட்டிங் மும்பையைத் தொடர்ந்து ஜப்பானில் நடைபெற்று வந்தது. கடந்த 50 நாட்களுக்கும் மேலாக நடந்த இப்படத்தின் ஷூட்டிங் சமீபத்தில் நிறைவடைந்தது. இதைத் தொடர்ந்து படக்குழுவினருக்கு 'பார்ட்டி' அளிக்கப்பட்டது. இதில் நடிகை சாய் பல்லவி உற்சாகமாக நடனமாடும் வீடியோ சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.

x