ஆக்ஸிஸ், ஹெச்டிஎஃப்சி வங்கிகளுக்கு ரூ.2.91 கோடி அபராதம்


மும்பை: ஆக்ஸிஸ் வங்கி மற்றும் ஹெச்டிஎஃப்சி வங்கி மீது ரிசர்வ் வங்கி ரூ.2.91 கோடி அபராதம் விதித்துள்ளது.

வைப்புத் தொகை மீதான வட்டி விகிதம், உங்கள் வாடிக்கையாளர்களை அறிந்து கொள்ளுங்கள், வேளாண் துறைக்கான கடன் ஆகியவை தொடர்பான ரிசர்வ் வங்கியின் விதிமுறைகளை பின்பற்றத் தவறியதால் ஆக்ஸிஸ் வங்கிக்கு ரூ.1.91 கோடியும், வட்டி விகிதம், வாடிக்கையாளர்கள் சேவை தொடர்பான விதிமுறைகளைப் பின்பற்றத் தவறியதால் ஹெச்டிஎஃப்சி வங்கிக்கு ரூ.1 கோடியும் ரிசர்வ் வங்கி அபராதம் விதித்துள்ளது.

இதுகுறித்து ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிக்கையில், “ஆக்ஸிஸ் வங்கி ஹெச்டிஎஃப்சி வங்கி விதிமுறைகளை பின்பற்றவில்லை. இது தொடர்பாக இருவங்கிக்கும் நோட்டீஸ் அனுப்பினோம். இந்நிலையில், விதிகளை பின்பற்றத் தவறியதற்கு அவ்வங்கிகளுக்கு அபராதம் விதித்துள்ளோம்” என்றுதெரிவித்துள்ளது

x