84 நாட்களுக்கு இன்டர்நெட், ஓடிடி இலவசம்... ஒரே ரீசார்ஜ்ஜில் சூப்பர் ஆஃபர்!


ரீ சார்ஜ் பிளான்கள்

ஏர்டெல், ஜியோ நிறுவனங்களை விட மலிவு விலையில் அதிக டேட்டா மற்றும் நீண்ட நாட்கள் வேலிடிட்டி தரும் ப்ரீபெய்ட் திட்டங்களை வழங்கி வருகிறது பிஎஸ்என்எல் நிறுவனம். நாடு முழுவதும் தற்போது 4ஜி சேவை வழங்கும் பணிகளில் பிஎஸ்என்எல் நிறுவனம் ஈடுபட்டுள்ளது. அதே நேரம் வாடிக்கையாளர்களை கவர பல அசத்தலான ப்ரீபெய்ட் பிளான்களையும் அறிமுகப்படுத்தியுள்ளது. அதில் குறிப்பாக 84 நாட்கள் வேலிடிட்டியுடன் அன்லிமிடெட் டேட்டா மற்றும் ஓடிடி தளங்களை இலவசமாக வழங்கும் இரண்டு முக்கியமான திட்டங்களின் சலுகைகள் என்ன என்பதை பார்ப்போம்.

பிஎஸ்என்எல் ரூ.599 ப்ரீபெய்ட் திட்டம் தினசரி 3ஜிபி டேட்டா வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 84 நாட்கள் ஆகும். அதே போல், அன்லிமிடெட் அழைப்பு, தினசரி 100 எஸ்எம்எஸ் இந்த திட்டத்தில் கிடைக்கும். மேலும், ஸிங் மியூசிக் (Zing Music), ஆஸ்ட்ரோடெல் (Astrotell) மற்றும் கேம்ஆன் (GameOn) போன்ற சேவைகளும் இலவசமாக இந்த திட்டத்தில் கிடைக்கும். குறிப்பாக இந்த திட்டத்தில் நள்ளிரவு 12 மணி முதல் அதிகாலை 5 மணி வரை 40KBPS வேகத்தில் அன்லிமிடெட் இணைய சேவை வழங்கப்படுகிறது.

ரூ.769 ப்ரீபெய்ட் திட்டத்தின் மூலம் நாள் ஒன்றுக்கு 2 ஜிபி டேட்டாவை பயனாளர்கள் பெற முடியும். வழக்கமான அன்லிமிடெட் அழைப்பு, தினசரி 100 எஸ்எம்எஸ் உள்ளிட்ட சேவைகள் கிடைக்கும். இந்த திட்டத்தின் வேலிடிட்டியும் 84 நாட்கள் ஆகும். மேலும், பிஎஸ்என்எல் ட்யூன்ஸ்(BSNL Tunes), ஈரோஸ் நவ்(EROS Now) என்டர்டெயின்மென்ட் சேவைகள், ஹார்டி மொபைல் கேமிங்(Hardy Mobile Gaming), லிஸ்ட்ன் மியூசிக் சர்வீசஸ் உள்ளிட்ட பல்வேறு கூடுதல் நன்மைகள் இந்த திட்டத்தில் உள்ளது.

இந்த திட்டங்கள் மூலம் 3 மாத காலத்திற்கு ரீசார்ஜ் செய்ய வேண்டிய கட்டாயம் இல்லை. ஏர்டெல், ஜியோ நிறுவனங்களுக்கு போட்டியாக பிஎஸ்என்எல் நிறுவனமும் களமிறங்கியுள்ளது அதன் வாடிக்கையாளர்களிடையே வரவேற்பையும் பெற்றுள்ளது.

x