சென்செக்ஸ் வீழ்ச்சி: முதலீட்டாளர்களுக்கு ரூ.5 லட்சம் கோடி இழப்பு


மும்பை: இந்திய பங்குச் சந்தைகளில் வர்த்தகம் வாரத்தின் இறுதிநாளான நேற்றுகடும் சரிவை சந்தித்தது. சென்செக்ஸ் 1,017 புள்ளிகள் சரிந்து 81,183-லும், நிஃப்டி 293 புள்ளிகள் வீழ்ச்சியடைந்து 24,852-லும் நிலைத்தன.

சென்செக்ஸ் மற்றும் நிஃப்டிமுறையே 1.24 சதவீதம் மற்றும்1.17 சதவீதம் வீழ்ச்சிகண்டதன் காரணமாக முதலீட்டாளர்களின் பங்கு மதிப்பு ரூ.5 லட்சம் கோடி குறைந்துரூ.460.46 லட்சம் கோடியானது.

அமெரிக்க வேலைவாய்ப்பு புள்ளிவிவரம் வெளியாகவிருந்த நிலையில் அது பெடரல் ரிசர்வ் வட்டிவிகித குறைப்பில் தாக்கத்தை ஏற்படுத்தலாம் என்ற நிலைப்பாட்டால் பல நிறுவனங்களின் பங்குகள் குறைந்த விலைக்கு கைமாறின

x