உத்தராகண்ட் சுரங்கப்பாதை விபத்தில் சிக்கியுள்ள தொழிலாளர்களை மீட்க கேரளாவை சேர்ந்த இளைஞர் ஒருவர் தாமாக முன் வந்துள்ளார்.
உத்தராகண்டில் சார்தாம் நெடுஞ்சாலை திட்டத்தின் ஒரு பகுதியாக உத்தரகாசி, யமுனோத்ரியை இணைக்கும் வகையில் சில்க்யாரா வளைவு - பர்காட் இடையே 4.5 கி.மீ. தொலைவுக்கு சுரங்கப்பாதை அமைக்கப்பட்டு வருகிறது. கடந்த 12-ம் தேதி அதிகாலை 4 மணி அளவில் 60 மீட்டர் தொலைவு சுரங்கப் பாதையில் மண் சரிந்தது. இருபுறமும் மணல் மூடிய நிலையில் சுரங்கப்பாதைக்குள் 40 தொழிலாளர்கள் சிக்கி உள்ளனர். இவர்களை மீட்கும் பணிகள் 6 நாட்களுக்கு மேலாக நீடித்து வருகிறது.
மீட்பு பணியில் பேரிடர் மீட்பு குழுவினர் இரவு பகலாக ஈடுபட்டு வருகின்றனர். இந்த மீட்பு பணியில் ஈடுபட கேரளாவை சேர்ந்த வாலிபர் ஒருவர், தாமாகவே முன்வந்துள்ளார். அவர் கேரள மாநிலம் விதுரா பகுதியை சேர்ந்த ரஞ்சித். பட்டதாரியான இவர், பல்வேறு இயற்கை பேரிடர் மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ளார். இந்த நிலையில் இதனால் தற்போது உத்தரகாண்ட் உத்திர காசியில் சுரங்கத்துக்குள் சிக்கிய தொழிலாளர்களை மீட்கும் பணியில் ஈடுபட தானாகவே முன்வந்திருக்கிறார். ரஞ்சித் இந்த துறையில் சம்பளம் வாங்காமல் பணிப்புரிந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் வாசிக்கலாமே...