தபால் ஓட்டு... சீனியர் சிட்டிசன்களுக்கு முக்கிய அறிவிப்பு!


முதியவர்

வரும் மக்களவைத் தேர்தலில் தபால் மூலம் வாக்களிக்கும் வயதை 85 ஆக உயர்த்தி மத்திய சட்ட அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

தேர்தல் ஆணையம்

விரைவில் மக்களவைத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட உள்ளது. இந்த நிலையில், அரசியல் கட்சிகள் கூட்டணி பேச்சுவார்த்தையில் தீவிரம் காட்டி வருகின்றன. இந்த நிலையில் சீனியர் சிட்டிசன்களுக்கான ஒரு முக்கிய அறிவிப்பை மத்திய அரசின் சட்ட அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதன்படி தபால் மூலம் வாக்களிப்பதற்கான குறைந்தபட்ச வயது வரம்பை மத்திய அரசு உயர்த்தியுள்ளது.

இனிமேல் 85 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் மட்டுமே வீட்டில் இருந்து வாக்களிக்க முடியும். 85 வயதுக்கு கீழ் உள்ள மூத்த குடிமக்கள் இனி வாக்களிக்க வாக்குச்சாவடிக்கு செல்ல வேண்டும்.

இதற்கு முன்பு, தபால் மூலம் வாக்களிக்கும் வயது 80 ஆக இருந்தது. ஆனால், கடந்த தேர்தல்களில் 80 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் தபால் மூலம் வாக்களிக்க விரும்பாமல் வாக்குச்சாவடிக்குச் சென்று வாக்களிக்க விரும்பினர். இதைக் கருத்தில் கொண்டு, தபால் ஓட்டுப் போடுவதற்கான குறைந்தபட்ச வயதை தேர்தல் ஆணையம் இப்போது உயர்த்தியுள்ளது.

தற்போது நாட்டில் 80 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களின் மொத்த எண்ணிக்கை 1.75 கோடியாக உள்ளது. இதில் 98 லட்சம் பேர் 80-85 வயதுக்குட்பட்டவர்கள். இந்தத் தேர்தலில் 85 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கு தபாலில் வாக்களிக்கும் வசதி வழங்கப்படுகிறது.

தபால் வாக்குகள்

2020 பீகார் சட்டப்பேரவைத் தேர்தலின் போது, கொரோனா தொற்று அச்சம் இருந்ததால் தொற்று பாதிக்கப்பட்ட நபர்களுக்கும் தபாலில் வாக்களிக்கும் வசதி வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

x