சத்தீஸ்கரில் 9 மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொலை: பாதுகாப்பு படையினரின் அதிரடி என்கவுன்டர்


சத்தீஸ்கர்: பஸ்தார் பகுதியில் பாதுகாப்புப் படையினர் நடத்திய என்கவுன்டரில் ஒன்பது மாவோயிஸ்டுகள் கொல்லப்பட்டனர்.

பாதுகாப்புப் படையினரின் கூட்டுக் குழு மாவோயிஸ்ட் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தபோது, ​​தண்டேவாடா மற்றும் பிஜாப்பூர் மாவட்டங்களின் எல்லையில் உள்ள காட்டில் காலை 10.30 மணியளவில் துப்பாக்கிச் சண்டை நடந்தது என்று பஸ்தார் ரேஞ்ச் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெனரல் சுந்தர்ராஜ் தெரிவித்துள்ளார்

மாவட்ட ரிசர்வ் காவலர் (டிஆர்ஜி) மற்றும் மத்திய ரிசர்வ் போலீஸ் படை (சிஆர்பிஎஃப்) ஆகியவற்றைச் சேர்ந்த வீரர்கள் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். மேற்கு பஸ்தார் பகுதியில் மாவோயிஸ்ட்கன் நடமாட்டம் பற்றிய தகவல் கிடைத்ததால் பாதுகாப்பு படை தேடுதல் வேட்டையை தொடங்கியது. இதனையடுத்து இரு தரப்புக்கும் இடையே துப்பாக்கிச் சூடு நீண்ட நேரம் நீடித்தது. அதைத் தொடர்ந்து ஒன்பது மாவோயிஸ்டுகளின் உடல்கள் அந்த இடத்திலிருந்து மீட்கப்பட்டன.

மேலும், என்கவுன்ட்டர் நடந்த இடத்தில் இருந்து ஏராளமான ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. பாதுகாப்புப் படையினர் பாதுகாப்பாக இருப்பதாகவும், அப்பகுதியில் தேடுதல் பணி தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் இன்ஸ்பெக்டர் ஜெனரல் சுந்தர்ராஜ் கூறினார். பஸ்தார் பகுதி, தண்டேவாடா மற்றும் பிஜாப்பூர் உட்பட ஏழு மாவட்டங்களை உள்ளடக்கியது.

இந்த சம்பவத்துடன் சேர்ந்து, இந்த ஆண்டு இதுவரை சத்தீஸ்கரில் பல்வேறு என்கவுன்ட்டர்களில் 154 மாவோயிஸ்டுகள் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர் என்று காவல்துறை தெரிவித்துள்ளது.

x