பொதுமக்கள் அதிர்ச்சி... ஆவின் பொருட்களின் விலை திடீர் உயர்வு.. இன்று முதல் அமலுக்கு வந்தது!


ஆவின் பால்பொருட்கள்

தக்காளி, இஞ்சி என காய்கறிகளின் விலை ராக்கெட் வேகத்தில் உயர்ந்துள்ள நிலையில், அரிசியின் விலையும் திடீரென உயர்ந்து பொதுமக்களை அதிர்ச்சியடைய செய்தது. ஏற்கெனவே எண்ணெய், பருப்புகளின் விலையும் அதிகரித்துள்ளதால் நடுத்தர மக்கள் பெரும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியிருக்கும் நிலையில், தற்போது ஆவின் பால் பொருட்களின் விலையும் உயர்த்தப்பட்டுள்ளது பொதுமக்களை மேலும் அதிர்ச்சியடைய செய்துள்ளது.

ஆவின் நிறுவனம் தனது பன்னீர் மற்றும் பாதாம் மிக்ஸ் ஆகியவற்றின் விற்பனை விலையை உயர்த்தி அறிவித்துள்ளது. இந்த விலை உயர்வு இன்று ஜூலை 25 முதல் அமலுக்கு வந்துள்ளது.

ஆவின் நிறுவனம் பால் மட்டுமன்றி பல்வேறு பால் பொருட்களையும் தயாரித்து விற்பனை செய்து வருகிறது. இவற்றில் பன்னீர் மற்றும் பாதாம் மிக்ஸ் ஆகியவற்றை கணிசமாக விலை உயர்த்தி தற்போது அறிவித்துள்ளது.

இதன்படி ஒரு கிலோ பன்னீர் விலை ரூ450 என்பதிலிருந்து ரூ100 அதிகரித்து ரூ.550 என்பதாக உயர்த்தப்பட்டுள்ளது. பாதாம் மிக்ஸ் 200 கிராம் விலை ரூ.100 என்பதிலிருந்து, ரூ120 என்பதாக உயர்வு கண்டுள்ளது. மேலும் பன்னீர் 200 கிராமின் விலை ரூ100 என்பதிலிருந்து, ரூ120 என உயர்த்தப்பட்டுள்ளது. 500 கிராம் பன்னீர் விலை ரூ.250 என்பதிலிருந்து ரூ300 என்பதாக உயர்த்தப்பட்டுள்ளது.

ஆவின் நிறுவனத்தின் இந்த அறிவிப்பின் மூலம் பன்னீர், பாதாம் மிக்ஸ் ஆகியவற்றின் விலைகள் கிலோவுக்கு தலா ரூ.100 உயர்வு கண்டுள்ளது. ஆவின் நிறுவனப் பால்பொருட்கள் விலை உயர்வின் பின்னணியில் காரணம் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. இந்த பால்பொருட்களின் விலை உயர்வு கண்டதை அடுத்து, அவை தொடர்பான உணவுப் பொருட்களின் விலையும் உயர்வு காண இருக்கின்றன.

x