பாட்னா: பிஹாரில் மத்திய அமைச்சர் சிராக் பாஸ்வான் அதிவேகமாக காரில் சென்றதற்காக அவருக்கு அபராதம் விதிக்கும் வகையில் இ-சலான் வழங்கப்பட்டுள்ளது.
பிஹாரில் மத்திய அமைச்சரும், லோக் ஜனசக்தி கட்சி (ராம் விலாஸ்) தலைவருமான சிராக் பாஸ்வான் அதிவேகமாக வாகனம் ஓட்டியதற்காக இ-செலான் வழங்கப்பட்டுள்ளது.
பிஹாரில் உள்ள ஒரு சுங்கச்சாவடியில் புதிதாக நிறுவப்பட்ட தானியங்கி வேகம் கண்டறியும் கருவி மூலமாக சிராக் பாஸ்வானின் வாகனம் அதிவேகமாகச் செல்வது கண்டறியப்பட்டு, அவருக்கு அபராதம் விதிக்கும் வகையிலான இ-சலான் வெளியிடப்பட்டுள்ளது. சிராக் பாஸ்வான், ஹாஜிபூரில் இருந்து சம்பாரண் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த போது இந்த செலான் வழங்கப்பட்டுள்ளது.
பிஹாரில் வேகமாக செல்லும் கார்களை கண்டறிய அங்குள்ள சுங்கச்சாவடிகளில் புதிய தானியங்கி கருவி நிறுவப்பட்டுள்ளது.
இந்த கருவிகள் மூலமாக பிஹார் போக்குவரத்துத் துறை மற்றும் போக்குவரத்து காவல்துறை மோட்டார் வாகனச் சட்டத்தை மீறியதற்காக, மாநிலத்தில் உள்ள 13 சுங்கச்சாவடிகளில் ஒரு வாரத்தில் ரூ. 9.49 கோடி மதிப்புள்ள 16,700 இ-சலான்களை வழங்கப்பட்டுள்ளன.
இவ்வாறு வழங்கப்பட்ட 16,755 இ-சலான்களில், 9,676 பிற மாநிலங்களில் பதிவுசெய்யப்பட்ட வாகனங்கள் மற்றும் 7,079 உள் மாநில வாகனங்களும் அடங்கும். இந்த இ-சலான்கள் ஆகஸ்ட் 7 முதல் 15 வரை ஒரு வாரத்தில் வழங்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.