மருத்துவ உபகரணங்களை உள்நாட்டிலேயே தயாரிக்க மத்திய அரசு ஊக்கத் தொகை


புதுடெல்லி: மருத்துவ உபகரண தயாரிப்புகளை உள்நாட்டிலேயே மேற்கொள்ளும் நோக்கில், மத்திய அரசு ஊக்கத் தொகைத் திட்டத்தை கொண்டுவர முடிவு செய்துள்ளதாக மருந்துத் துறை செயலர் அருணிஷ் சாவ்லா தெரிவித்துள்ளார்.

ஜெனரிக் மருந்துத் தயாரிப்பில் இந்தியா உலக அளவில் முக்கிய நாடாக உள்ளது. ஆனால், மருத்துவ உபகரணங்களைப் பொறுத்தவரையில், இந்தியா 70 சதவீதம் வெளிநாடுகளிலிருந்தே இறக்குமதி செய்கிறது. குறிப்பாக, டிஜிட்டல் எக்ஸ் ரே, சிடி ஸ்கேன் மற்றும் எம்ஆர்ஐ உள்ளிட்ட மருத்துவ இயந்திரங்கள் மற்றும் உபகரணங்களுக்கான பாகங்களை வெளிநாடுகளிலிருந்தே இந்தியா இறக்குமதி செய்து வருகிறது.

இது குறித்து மருந்துத் துறை செயலர் அருணிஷ் சாவ்லா கூறுகையில், “உள்நாட்டிலேயே மருத்துவ உபகரணங்கள் தயாரிப்பை அதிகப்படுத்த மத்திய அரசு விரும்புகிறது. இதற்கான ஊக்கத் தொகைத் திட்டம் உருவாக்கப்பட்டு வருகிறது. டிஜிட்டல் எக்ஸ் ரே, சிடி ஸ்கேன் மற்றும் எம்ஆர்ஐ ஆகியவற்றுக்கான பாகங்களை தயாரிக்கும் நிறுவனங்களுக்கு 20 சதவீத மூலதன மானியம் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. இதுபோன்று மேலும் சில ஊக்கத் தொகை திட்டங்கள் பரிசீலிக்கப்பட்டு வருகின்றன” என்று தெரிவித்தார்

x