கேரள மாநிலம் ஆலப்புழாவில், மனைவி மீது பெட்ரோல் ஊற்றி கணவனே தீ வைத்து கொளுத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உயிருக்கு ஆபத்தான நிலையில் மனைவி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கேரள மாநிலம், ஆலப்புழா மாவட்டம் சேர்தலாவில் வசித்து வருபவர் ஷியாம்ஜித்(37). இவருடைய மனைவி ஆரத்தி(32). ஆரத்தி சேர்தலாவில் தனியார் அலுவலகம் ஒன்றில் வேலைப் பார்த்து வருகிறார்.
இந்நிலையில், இன்று பிப்ரவரி 19ம் தேதி காலை, ஸ்கூட்டியில் ஆரத்தி தனது அலுவலகத்திற்கு புறப்பட்டு சென்றுக் கொண்டிருந்த அவரை வழிமறித்த ஷியாம்ஜித், அவர் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்து கொல்ல முயன்றுள்ளார். ஆரத்தியின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் உடனடியாக திரண்டு, எரிந்துக் கொண்டிருந்த ஆரத்தியை பலத்த தீக்காயங்களுடன் மீட்டு, உடனடியாக சேர்த்தலாவில் உள்ள அரசு தாலுகா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். உயிருக்கு ஆபத்தான நிலையில், ஆரத்தி சிகிச்சைப் பெற்று வருகிறார்.
இது குறித்து வழக்குப்பதிவு செய்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். குடும்ப தகராறு காரணமாக ஷியாம்ஜித் பெட்ரோல் ஊற்றி தீ வைத்ததாக கூறப்படுகிறது. தீயில் சிக்கிய ஷியாம்ஜித்துக்கும் தீக்காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதையும் வாசிக்கலாமே...
இன்றே கடைசி தேதி... இந்திய ரயில்வேயில் 5,696 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்!
இன்று தமிழக பட்ஜெட் 2024 தாக்கல்... இடம் பெறுகிறது மாபெரும் ஏழு தமிழ் கனவுகள்!