புதுடெல்லி: ஹைதராபாத்தைச் சேர்ந்தவர் பர்ஹத்துல்லா கோரி. பாகிஸ்தானின் லாகூரில் இருந்தபடி இந்தியாவுக்கு எதிராக செயல்பட்டு வருகிறார். கடந்த 2002-ல் குஜராத்தில் உள்ள அக்சர்தாம் கோயில் மீது நடத்தப்பட்ட தாக்குதல் உள்ளிட்ட பல்வேறு தீவிரவாத தாக்குதலில் இவருக்கு தொடர்பு இருப்பதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இவர் தேடப்படும் குற்றவாளி என மத்திய அரசு 2020-ல் அறிவித்தது.
இந்நிலையில், பர்ஹத்துல்லா கோரி டெலிகிராம் செயலியில் தனது ஆதரவாளர்களுக்கு ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். இதுகடந்த 2 வாரங்களாக சமூக வலைதளங்களில் பகிரப்படுவதாக உளவுத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.வீடியோவில் அவர் கூறியிருப்பதாவது:
என்ஐஏ மூலம் நமது சொத்துகளை குறிவைத்துள்ளது. ஆனால் ஒரு நாள் நாம் அதிகாரத்தை கைப்பற்றுவோம்.துப்பாக்கிகளை பயன்படுத்தாமல் வேறு வகையில்அரசுக்கு இடையூறு ஏற்படுத்துங்கள். பெட்ரோல் பைப்லைன்கள், ரயில்வே பாதைகள், இதர போக்குவரத்து வசதிகள் மீது தாக்குதல் நடத்துங்கள். டெல்லி, மும்பை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் அதிக அளவில் ரயில்களை தடம்புரளச் செய்யுங்கள். மேலும் இந்து மத தலைவர்கள் மற்றும் காவல் துறையினரை குறிவைத்து தாக்குதல் நடத்துங்கள். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்