நீண்ட இழுபறிக்குப் பின்னர் ஒருவழியாக பிஎஸ்என்எல் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கான 4ஜி சேவையை அறிமுகம் செய்கிறது. அதற்கான இலவச அப்கிரேடிங் மற்றும் இலவச டேட்டாவுக்கு தயாராகுமாறும் அறிவுறுத்தி உள்ளது.
இந்தியாவின் தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் 5ஜி சேவைக்கு வந்துவிட்டன. அவை 7 ஆண்டுகளுக்கு முன்னர் அறிமுகம் செய்த 4ஜி சேவைக்கு, இப்போதுதான் பொதுத்துறை நிறுவனமான பிஎஸ்என்எல் நகர்ந்திருக்கிறது. அதே சூட்டில் சிறிய இடைவேளையில் 5ஜி சேவையும் வழங்கவிருப்பதாக பிஎஸ்என்எல் உத்திரவாதம் தந்திருக்கிறது.
பிஎஸ்என்எல் கோலோச்சிய இந்திய தொலைத்தொடர்பு துறையில் தனியாரின் ஆதிக்கம் காரணமாக, பிஎஸ்என்எல் பின்தங்கிப்போனது. சரியும் பிஎஸ்என்எல் நிறுவனத்துக்கு ஆதரவளிக்காது அரசுகளும் புறக்கணிக்க ஆரம்பித்தன. இதனால் ஏர்டெல், ஜியோ, வோடோபோன் உள்ளிட்ட தனியார்கள் இந்திய சந்தையில் ஆதிக்கம் செலுத்தின. பிஎஸ்என்எல் நிறுவனமும் அதன் வாடிக்கையாளர்களும் தவிக்க ஆரம்பித்தனர்.
பிஎஸ்என்எல் நிறுவனத்துக்கு புத்துயிர் தரும் நோக்கில் வெகுதாமதமாக, புதிய ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இதன்படி 4ஜி மற்றும் 5ஜி சேவைகள் அடுத்தடுத்து அறிமுகமாகும் என முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி டிசம்பரில் பிஎஸ்என்எல் 4ஜி சேவையை அறிமுகம் செய்கிறது. 2024 ஜூன் முதல் வாடிக்கையாளர் அனைவருக்குமான 4ஜி சேவை சாத்தியமாகும்.
அதனைத் தொடர்ந்து சில மாதங்கள் இடைவெளியில் 5ஜி சேவையும் அறிமுகமாகும் என பிஎஸ்என்எல் உறுதி தெரிவித்துள்ளது. தற்போதைக்கு பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்கள் தங்களது 2ஜி மற்றும் 3ஜி சிம்களை, 4ஜி சிம் வசதிக்கு இலவசமாக மேம்படுத்திக்கொள்ளலாம். மேலும் வாடிக்கையாளர்களின் காத்திருப்புக்கு பரிசாக இலவச டேட்டாவையும் பெறலாம். இவை தொடர்பான பிஎஸ்என்எல் நிறுவனத்தின் விரிவான அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது.
இதையும் வாசிக்கலாமே...
HBD Kamalhassan: கமல்ஹாசன் வேண்டுகோளை நிராகரித்த ’சூப்பர் ஸ்டார்’!
இன்று 19 மாவட்டங்களில் கனமழை... வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!
சத்தீஸ்கர் வாக்குப்பதிவில் பரபரப்பு... குண்டுவெடிப்பில் பாதுகாப்பு படை வீரர் காயம்!
திமுகவுடன் கூட்டணியா? கமல் சொன்ன 'நச்' பதில்!
வீட்டை காலி செய்ய மிரட்டுகிறார்! நடிகர் பிரபுதேவா சகோதரர் மீது பரபரப்பு புகார்