அடுத்த சர்ச்சை... அதானிக்கு தாரைவார்க்கப்படுகிறதா தாராவி?


தாராவி - அதானி

மும்பையின் இதயமான தாராவி குடிசைப் பகுதிகளின் அடையாளத்தை முற்றிலும் மாற்றும் பொறுப்பை எடுத்திருக்கிறது அதானி குழுமம். இதற்கு எதிராகவும், ஆதரவாகவும் விமர்சனங்கள் பரவி வருகின்றன.

ஆசியாவின் மிகப்பெரும் குடிசைப் பகுதிகளில் ஒன்று தாராவி. இந்தியாவின் பொருளாதாரத் தலைநகரான மும்பை மாநகரை வடிவமைத்த தொழிலாளர்களில் பெருமளவினர் தாராவியை சேர்ந்தவர்கள். ஆனால் தீட்டிய மரத்தில் கூர் பார்ப்பதாக, பல கட்சிகளின் ஆட்சியாளர்களும் பல்வேறு காலக்கட்டதில் தாராவி மீது கண்வைத்துள்ளனர்.

தாராவி

குடிசைகளை ஒழித்து அங்குள்ள மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தி, மும்பை மாநகரின் அடையாளத்துக்கு இணையாக தாராவியை மாற்றப்போவதாக ஆட்சியாளர்கள் உறுதிபூண்டிருக்கிறார்கள். ஆனால் அவர்களின் உள் நோக்கம் அறிந்த தாராவி மக்கள், அதற்கு இணங்கியபாடில்லை. குறிப்பாக அங்கே பலதலைமுறைகளாக அதிகாரம் செலுத்தும் தமிழர்களின் உறுதி அதற்கு இடம்கொடுக்கவில்லை.

இந்த நிலையில் குடிசை மாற்றுத் திட்டப்பணி என்ற பெயரில் அங்குள்ள சுமார் 10 லட்சத்துக்கும் மேலானவர்கள் மறுகுடியமர்வு செய்யப்பட இருக்கின்றனர். சுமார் 600 ஏக்கர் பரப்பளவில், ஒன்றேகால் லட்சம் வீடுகளில் செறிந்திருக்கும் மக்கள் அங்கிருந்து படிப்படியாக அப்புறப்படுத்தப்பட இருக்கின்றனர்.

தாராவி

தாராவி அடையாளத்தை மாற்றும் திட்டப்பணிகளை அதானி குழுமம் மேற்கொள்ள இருக்கிறது. அங்கு வசிக்கும் மக்களுக்கு என 47 ஏக்கரில் ரயில்வே இடம் ஒதுக்கப்படுகிறது. அதன் பின்னர் பெரும் கார்ப்பரேட் நிறுவனங்கள், நவீன குடியிருப்புகள், விளையாட்டு மைதானங்கள் என மும்பை மாநகரின் சாயலை ஒத்த நவீன் வசதிகள் தாராவியில் வர இருக்கின்றன.

இந்த திட்டப்பணிகளில் 80 சதவீதம் அதானி குழுமமும் 20 சதவீதம் மாநில அரசும் செலவிட இருக்கின்றன. மறுவளர்ச்சி திட்ட மதிப்பீடு என்ற பெயரில் 23 ஆயிரம் கோடிக்கு திட்டமிட்டு இருக்கிறார்கள். ரூ12,500 கோடி முதலீட்டுடன் அதானி குழுமம் தாராவிக்குள் காலடி வைக்கிறது. திட்ட காலமான 7 ஆண்டு முடிவில் தாராவியின் அடையாளமே மாறியிருக்கும் என்று உறுதியளிக்கிறார்கள். இதில் மண்ணின் மைந்தர்களான தாராவி மக்களின் நிலைமை கேள்விக்குறியாகி இருக்கிறது.

x