புதுடெல்லி: மத்திய பிரதேசத்தில் நர்சிங் கல்லூரிகள் தரமற்று இயங்குவதாக புகார்கள் வந்த நிலையில், இதுகுறித்து சிபிஐ விசாரித்தது.
இந்நிலையில், நர்சிங் கல்லூரிநிர்வாகத்திடமிருந்து கடந்த ஞாயிற்றுக்கிழமை சிபிஐ அதிகாரி ராகுல் ராஜ் ரூ.10 லட்சம்பெற்றபோது சிபிஐ அவரை கைதுசெய்தது. இந்த வழக்கில் இதுவரையில் 13 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவர்கள்மத்திய பிரதேச உயர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
மே 29-ம் வரை அவர்களைக் காவலில் எடுத்து விசாரிக்க சிபிஐ-க்கு உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியது.
இந்நிலையில், ரூ.10 லட்சம் லஞ்சம் வாங்கியதாக கைது செய்யப்பட்ட சிபிஐ அதிகாரி ராகுல் ராஜ் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.