ஒருங்கிணைந்த ஓய்வூதியம்: பிரதமர் மோடி பாராட்டு


புதுடெல்லி: மத்திய அரசு ஊழியர்களுக்கான ஓய்வூதிய திட்டம் கடந்த 2004-ம்ஆண்டு மாற்றப்பட்டது. தேசியஓய்வூதிய திட்டம் என அழைக்கப்பட்ட இதற்கு அரசு ஊழியர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வலியுறுத்தி வந்தனர். இந்நிலையில், ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை நேற்று முன்தினம் ஒப்புதல் வழங்கியது. இது 2025 ஏப்ரல் 1-ம் தேதி முதல் அமலுக்கு வர உள்ளது.

இதுகுறித்து பிரதமர் நரேந்திர மோடி தனது எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில், “நாட்டின் வளர்ச்சிக்காக கடுமையாக பணி புரியும் அனைத்து அரசு ஊழியர்கள் பற்றி பெருமிதம் கொள்கிறேன். விரைவில் அறிமுகமாக உள்ள ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டம்அரசு ஊழியர்களின் கண்ணியத்தையும் நிதி பாதுகாப்பையும் உறுதி செய்யும். இந்த நடவடிக்கையானது, அரசு ஊழியர் நலன் மற்றும் அவர்களின் எதிர்காலத்தை பாதுகாப்பதில் மத்திய அரசு எப்படி அக்கறை கொண்டுள்ளது என்பதை பிரதிபலிக்கிறது” என பதிவிட்டுள்ளார்.

இதுகுறித்து மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறும்போது, “மத்திய அரசு ஊழியர் களுக்கு ஓய்வூதியம் கிடைப்பதை உறுதி செய்ய வகை செய்யும் இந்த அறிவிப்பு மிகவும் முக்கி யத்துவம் வாய்ந்தது ஆகும். துணிச்சலான முடிவை எடுத்த பிரதமர் மோடிக்கு நன்றி” என்று தெரிவித்துள்ளார்

x