'வேலை கிடைக்கவில்லை; ஆனாலும் மக்களின் பாக்கெட்டுகள் கொள்ளையடிக்கப்படுகிறது' - மத்திய அரசு மீது ராகுல் தாக்கு


கோர்பாவில் மக்களிடையே பேசும் ராகுல் காந்தி

நாட்டில் மக்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கவில்லை. ஆனால் அவர்களின் பாக்கெட்டுகளிலிருந்து கொள்ளையடிக்கப்படுகிறது என காங்கிரஸ் எம்பி- ராகுல் காந்தி கூறியுள்ளார்.

சத்தீஸ்கர் மாநிலம், கோர்பா மாவட்டத்தில் தனது 'பாரத் ஜோடோ நியாய யாத்திரை'-யின்போது ராகுல் காந்தி உரையாற்றினார். அப்போது அவர், ”மக்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கவில்லை. ஆனால் அவர்களின் பாக்கெட்டுகள் கொள்ளையடிக்கப்படுகின்றன. அவர்கள் தவறாக வழிநடத்தப்படுகிறார்கள். எனவே, மக்கள் விழித்துக்கொள்ள வேண்டும்.

பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், தலித்துகள் மற்றும் பழங்குடியினர் நாட்டின் மக்கள் தொகையில் 74 சதவீதம் உள்ளனர். ஆனால் இந்த சமூகங்களைச் சேர்ந்த ஒரு நபர் கூட இந்தியாவின் முதல் 200 நிறுவனங்களின் உரிமையாளராகவோ அல்லது நிர்வாகத்திலோ இல்லை.

பாரத் ஜோடோ நியாய யாத்திரை

கடந்த மாதம் ராமர் கோயில் திறப்பு விழாவில் ஏழை, தொழிலாளி, வேலையில்லாத நபர் அல்லது சிறு வணிகரை நீங்கள் பார்த்தீர்களா? அதானி, அம்பானி, அமிதாப்பச்சன், ஐஸ்வர்யா ராய் மற்றும் பிற பெரிய தொழிலதிபர்களை மட்டுமே நான் பார்த்தேன்.

மக்கள் வேலைவாய்ப்பைப் பெறவில்லை. பணவீக்கத்தின் தாக்கத்தை எதிர்கொள்கின்றனர். அதே நேரத்தில் அதானி, அம்பானி சீனப் பொருட்களை விற்பனை செய்வதன் மூலம் லாபம் ஈட்டுகின்றனர்” என்றார்.

இதையும் வாசிக்கலாமே...

ஆளுநருக்கு அப்பாவு கொடுத்த பதிலடி... தமிழக சட்டமன்றத்தில் பரபரப்பு!

x