தெரு நாய்கள் தொல்லை... மோடிக்கு கார்த்தி சிதம்பரம் வைத்த முக்கிய கோரிக்கை!


கார்த்தி சிதம்பரம்

தெரு நாய்கள் தொல்லைக்குத் தீர்வு காண, தேசிய அளவிலான சிறப்புக் குழு ஒன்றை பிரதமர் மோடி அமைக்க வேண்டும் என காங்கிரஸ் எம்பி-யான கார்த்தி சிதம்பரம் வலியுறுத்தியுள்ளார்.

தெரு நாய்கள் தொல்லை

நாட்டில் கவனிக்கப்படாத எத்தனையோ பிரச்சினைகள் உள்ளன. அதில் ஒன்று நாய்க்கடி. தெரு நாய்களால் தொல்லை அனுபவிக்காதவர்களே இல்லை எனச் சொல்லுமளவுக்கு அதன் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதனை உணர்த்தும் விதமாக உச்ச நீதிமன்றம் முதல் உயர் நீதிமன்றங்கள் வரை தெரு நாய்களைக் கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றன. மத்திய அரசும் கடந்த ஜூன் மாதம் தெரு நாய்களைக் கட்டுப்படுத்துவது தொடர்பாகச் சட்டம் கொண்டு வரத் திட்டமிட்டது. ஆனால், இதுவரை சட்டம் அமலுக்கு வந்தபாடில்லை.

தெரு நாய்கள் தொல்லை

இந்தியாவில் தினமும் சராசரியாக 5,739 நாய்க் கடி சம்பவங்கள் நடக்கின்றன. உலகம் முழுவதும் ஆண்டு தோறும் 55,000 பேர் நாய் கடித்து இறக்கிறார்கள். இதில் இந்தியாவில் மட்டும் 36% பேர். அதிலும், 30% - 60% பேர் 15 வயதுக்கு உட்பட்டோர் என்கின்றன புள்ளிவிவரங்கள்.

இந்தியாவில் கடந்த 2022-ம் ஆண்டை விட 2023-ம் ஆண்டு நாய்க் கடி சம்பவங்கள் 26.5% அதிகரித்துள்ளது. அதாவது 2022-ம் ஆண்டு 20 லட்சத்து 18 ஆயிரம் பேர் நாய்க் கடியால் பாதிக்கப்பட்டனர். அதுவே 2023-ம் ஆண்டு 20 லட்சத்து 75 ஆயிரமாக உயர்ந்துள்ளது.

தெரு நாய்கள் தொல்லை

இந்த நிலையில், தெரு நாய்கள் தொல்லை தொடர்பாக சிவகங்கை தொகுதி காங்கிரஸ் எம்பி-யான கார்த்தி சிதம்பரம் மக்களவையில் நேற்று பேசினார். அப்போது, இந்தியாவில் ஆறு கோடி தெரு நாய்கள் உள்ளதாகச் சுட்டிக்காட்டிய அவர், ரேபிஸ் தடுப்பூசிகளுக்காக ஆண்டு தோறும் 150 மில்லியன் அமெரிக்க டாலர்களை இந்தியா செலவிடுவதாகவும், உலகில் உள்ள ரேபிஸ் நோயாளிகளில் 36 சதவீதம் பேர் இந்தியாவில் இருப்பதாகவும் சுட்டிக்காட்டினார்.

கார்த்தி சிதம்பரம்

“இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காண தெரு நாய்கள் தொல்லைக்குத் தேசிய அளவிலான சிறப்புக் குழு ஒன்றைப் பிரதமர் மோடி அமைக்க வேண்டும்” எனவும் கார்த்தி வலியுறுத்தினார்.

இதற்கு முன்னரும் கூட, “தெரு நாய்கள் பிரச்சினையை அறிவியல் ரீதியாகவும் நெறிமுறை ரீதியாகவும் கையாள்வதற்கு உடனடியாக ஒரு தேசிய பணிக்குழு தேவை” என கார்த்தி வலியுறுத்தி இருந்தார். அதேபோல், தனது தொகுதியின் தெரு நாய் தொல்லைக்கு உரிய தீர்வு காணும்படி பிரதமர் மோடிக்கு கார்த்தி கடிதம் எழுதி இருந்ததும் குறிப்பிடத்தக்கது.

இதையும் வாசிக்கலாமே...

x