மத்திய அமைச்சர் பதவியிலிருந்து விலகுகிறாரா சுரேஷ் கோபி?!


திருவனந்தபுரம்: திரைப்படங்களில் நடிப்பதற்காக மத்திய இணை அமைச்சர் பதவியில் இருந்து சுரேஷ் கோபி விலகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் திரைப்பட வர்த்தக சபையில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் பேசிய சுரேஷ் கோபி, “திரைப்படம் என்பது எனது பிடித்தமானது. சினிமா இல்லாவிட்டால் நான் இறந்து விடுவேன். ‘ஒட்டக்கொம்பன்’ படத்தில் நடிக்க அனுமதி கேட்டுள்ளேன். எனக்கு இன்னும் அனுமதி கிடைக்கவில்லை, ஆனால் செப்டம்பர் 6-ம் தேதி நான் ‘ஒட்டக்கொம்பன்’ படத்தை தொடங்குகிறேன்.

எத்தனை படங்கள் நிலுவையில் உள்ளன என்று என்னிடம் கேட்டபோது, ​​மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடம், நான் சுமார் 20 முதல் 22 படங்களில் நடிக்க ஒப்புக் கொண்டுள்ளேன் என்று கூறினேன். அவர் அந்தக் கடிதத்தைத் தூக்கி எறிந்தார். நான் எப்போதும் என் தலைவர்களுக்குக் கீழ்ப்படிவேன். ஆனால், திரைப்படம் தான் என் விருப்பம். சினிமா இல்லையென்றால் நான் இறந்து விடுவேன். அவர்கள் என்னை அமைச்சர் பதவியிலிருந்து திருப்பி அனுப்பினால், நான் தப்பித்து விட்டதாக உணர்வேன். அப்போது திருச்சூர் மக்களுக்கு உழைக்க எனக்கு அதிக நேரம் கிடைக்கும்” என்று கூறினார்

அமித் ஷா உத்தரவை மீறி சினிமாவில் நடிப்பதில் சுரேஷ்கோபி உறுதியுடன் இருப்பதால், அவர் மத்திய அமைச்சர் பதவியிலிருந்து விரைவில் விலகலாம் என தகவல் வெளியாகியுள்ளது. பிரபல மலையாள நடிகரான சுரேஷ் கோபி கடந்த மக்களவைத் தேர்தலில் திருச்சூர் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றிருந்தார்ர். இதனை தொடர்ந்து அவர் மத்திய பெட்ரோலியம் மற்றும் சுற்றுலாத்துறை இணையமைச்சராக நியமிக்கப்பட்டார்.

x