இன்று கர்வா சௌத்: பெண்கள் நிலவை சல்லடை வழியே ஏன் பார்க்கிறார்கள்?! விரத பலன்களைத் தெரிஞ்சுக்கோங்க!


விரதம் மேற்கொள்ளும் பெண்கள்

தனது கணவனின் நீண்ட ஆயுளுக்காக காலை முதல் மாலை வரை உணவு உண்ணாமல் விரதம் இருந்து பெண்கள் மேற்கொள்ளும் கர்வா சௌத் பண்டிகை ஐப்பசி மாதம் முழு நிலவு முடிந்த நான்காம் நாளில் நடைபெறுகிறது. அதாவது இன்று வடமாநிலங்களில் கர்வா செளத் கொண்டாடபடுகிறது.

வடநாட்டில் திருமண ஆன பெண்களால் மட்டுமே கொண்டாடப்பட்டு வந்த இந்த பண்டிகையை, தற்போது திருமணமாகாத பெண்களும், தங்களின் காதலருக்காக நோன்பு கடைப்பிடித்து, கொண்டாடி வருகிறார்கள். நாள் முழுவதும் சாப்பிடாமல் நோன்பு இருக்கும் பெண்கள், நிலவு மற்றும் தங்கள் கணவரையோ, பிரியமான காதலரையோ சல்லடை மூலம் பார்த்த பிறகு தான் தண்ணீர் குடித்து நோன்பை முடிக்கின்றனர்.

'கர்வா சௌத்' பண்டிகை கொண்டாட பல காரணங்கள் சொல்லப்படுகிறது. இராணுவத்தில் இருக்கும் ஆண்கள் தங்கள் வீடுகளை விட்டுச் செல்வது வழக்கம். அவர்களின் பாதுகாப்பு மற்றும் ஆராக்கியத்திற்காக இறைவனை வேண்டி இந்த பண்டிகை கொண்டாடப்பட்டதாக கூறப்படுகிறது. அதே போல் புதிதாக திருமணமான பெண்கள், தனது கணவனின் குடும்பத்தினரோடு ஒரு இணக்கமான உறவை ஏபடுத்த, நட்பாக பழக இந்த பண்டிகை கொண்டாடப்பட்டதாக சில மரபுகள் தெரிவிக்கின்றன.

சல்லடை வழியாக சந்திரனை பார்க்கும் பெண்கள்

கர்வா சௌத் நாளில் பெண்கள் அதிகாலை 4 மணிக்கு எழுந்து முதலில் குளித்து, பின்னர் கடவுளை வணங்குவது நல்லது. அதன் பிறகு, மாலை சந்திரன் வானில் மேலெழும்பியதும், அவரை வணங்கிவிட்டு விரதத்தைத் ஆரம்பிக்கலாம். விரதம் ஆரம்பித்தவுடன் உணவு அருந்தாமல் இருக்க வேண்டும். பின்னர் நிலவையும், கணவரையும் சல்லடையின் மூலம் பார்த்த பிறகு தண்ணீர் அருந்தி விரதத்தை முடிக்கலாம்.

விரதம் இருக்கும் பெண்கள் சல்லடை மூலம் சந்திரனை முதலில் பார்க்க வேண்டும். அப்போது சந்திரனை நேரிடையாக பார்க்க கூடாது என்பதால் சல்லடையின் மூலமாக பார்க்கிறார்கள். சந்திரனை பெண்கள் ஏதாவது ஒரு தோற்றத்தில் பார்க்க வேண்டும்.

கொண்டாட்டம்

அதே சமயம் விரதம் இருக்கும் பெண்கள் இந்த சல்லடை மூலம் கணவனின் முகத்தைப் பார்த்து, சல்லடையில் உள்ள நூற்றுக்கணக்கான ஓட்டைகளைப் போல, அந்த துளைகள் வழியாக கணவனைப் பார்க்கும்போது, ​​அவர்களின் வயதும் நூற்றுக்கணக்கானதாக இருக்க வேண்டும் என்று பிரார்த்தனை செய்வார்கள்.

x