பயங்கரவாத தடைச் சட்டமான ’உபா’-வின் கீழ், இந்திய மாணவர் இஸ்லாமிய அமைப்பின்(சிமி) மீதான தடையை நீடிக்க, அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு அதிகாரம் வழங்கி இன்று (பிப்.5) மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
கடந்த 1977-ல் உத்தரபிரதேசம் மாநிலம் அலிகரில் சிமி அமைப்பு தொடங்கப்பட்டது. கடந்த காலங்களில் பல்வேறு சமூக விரோத செயல்களில் இந்த அமைப்பு ஈடுபட்டது. பாகிஸ்தானை சேர்ந்த லஷ்கர் இ தொய்பா மற்றும் இந்தியன் முஜாகிதீன் உள்ளிட்ட தீவிரவாத அமைப்புகளுடன் சிமிக்கு நெருங்கிய தொடர்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இதைத் தொடர்ந்து கடந்த 2001-ம் ஆண்டில் சிமி அமைப்புக்கு மத்திய உள்துறை அமைச்சகம் தடை விதித்தது. இந்தத் தடை அவ்வப்போது நீட்டிக்கப்பட்டு வருகிறது. கடைசியாக ஜனவரி 29 அன்று சிமி மீதான தடையை மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உத்தரவிட்டார். இந்த பயங்கரவாத அமைப்பின் மீதான தடையை நீட்டிக்கும் போது, பயங்கரவாதத்தை ஊக்குவிப்பதிலும், நாட்டில் அமைதி மற்றும் மத நல்லிணக்கத்தை சீர்குலைப்பதிலும் சிமி அமைப்பினரின் பின்னணி குறித்து மத்திய அரசு கவலை தெரிவித்தது.
திங்களன்று மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பில், மத்திய உள்துறை அமைச்சகம் சட்ட விரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டத்தின் மூலம் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைப் பயன்படுத்துவதன் மூலம், பிரிவு 7 மற்றும் அதன் கீழ் அனைத்து அதிகாரங்களும் பயன்படுத்தப்பட வேண்டும் என்று மத்திய அரசு அறிவுறுத்துகிறது. அந்தச் சட்டத்தின் பிரிவு 8, மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேச நிர்வாகங்கள் இனி சிமி அமைப்பை தடை செய்யும் அதிகாரத்தை பெறுகின்றன.
ஆந்திரப் பிரதேசம், குஜராத், ஜார்க்கண்ட், கேரளா, மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், தமிழ்நாடு, தெலுங்கானா, உத்தரப் பிரதேசம் ஆகிய 10 மாநில அரசுகள், சட்டத்திற்குப் புறம்பான செயல்பாடுகளின் விதிகளின் கீழ் ’சிமி’யை சட்டவிரோத அமைப்பாக அறிவிக்க பரிந்துரைத்துள்ளன. கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக சிமி தனது நாசகார நடவடிக்கைகளைத் தொடர்கிறது என்றும், இன்னும் தலைமறைவாக உள்ள தனது செயல்பாட்டாளர்களை சிமி தொடர்ந்து ஒருங்கிணைத்து வருகிறது என்று உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதையும் வாசிக்கலாமே...
ஸ்ரீதேவி மரணத்தில் மர்மம்... பிரதமர் பெயரில் போலி கடிதம் தயாரித்த இளம்பெண்!
'லால் சலாம்' படத்தை வெளியிட தடை!?
கட்சியைக் கைப்பற்ற சாட்டை துரைமுருகன் திட்டம்... என்ஐஏ சோதனையில் வெளியான அதிர்ச்சி!
நடிகர் விஜயால் இத்தனை கோடி நஷ்டமா?: தீயாய் பரவும் தகவல்!
நடிகை ஜெயலட்சுமிக்கு கொலைமிரட்டல்... போலீஸில் பரபரப்பு புகார்!