குரங்கு காய்ச்சல் காரணமாக கர்நாடகாவில் 2 பேர் பலியாகியுள்ளது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது
கர்நாடகா மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் குரங்கு காய்ச்சல் வேகமாகப் பரவி வருகிறது. இதுவரை மொத்தம் 49 பேருக்கு இந்த காய்ச்சல் பரவியுள்ளதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. இந்நிலையில், கடந்த ஜனவரி 8ம் தேதி சிவமோகா மாவட்டத்தில் 18 வயது இளம்பெண் இந்த காய்ச்சல் காரணமாக உயிரிழந்திருந்தார். இந்நிலையில், இன்று உடுப்பி மாவட்டத்தின் மணிப்பால் நகரில் 79 வயது மதிக்கத்தக்க முதியவர் இந்த காய்ச்சல் காரணமாகச் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இதன் மூலம் இந்த ஆண்டு குரங்கு காய்ச்சலுக்குப் பலியானவர்களின் எண்ணிக்கை இரண்டாக உயர்ந்துள்ளது. அதில் உத்தர கன்னடாவில் அதிக எண்ணிக்கையிலானோர் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், சிவமோகா மற்றும் சிக்மங்களூரு மாவட்டங்கள் அடுத்தடுத்த இடங்களில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்த காய்ச்சலைக் கட்டுப்படுத்த தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருவதாகக் கர்நாடக அரசு தெரிவித்துள்ளது. இந்த நோய்த் தொற்றுக்கு இதுவரை தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதன் காரணமாகக் கர்நாடக அரசு ஐசிஎம்ஆரிடம் இந்த நோய்த் தொற்றைத் தடுக்க தடுப்பூசி கொண்டு வர வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளது.
இந்த நோய் கர்நாடக வனப்பகுதிகளில் இருந்து 1957ம் ஆண்டு முதல் முதலாவதாக பரவியதாகக் கூறப்படுகிறது. அப்போதிலிருந்து ஆண்டு தோறும் சுமார் 500 பேர் வரை இந்த நோயால் பாதிக்கப்படுகின்றனர். இந்த நோய் குரங்கள் கடிப்பதன் மூலமோ அல்லது இறந்த குரங்களிடம் இருந்து மற்ற பூச்சிகளிடமும், அதன் மூலம் மனிதர்களுக்குப் பரவும் வாய்ப்புகள் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் வாசிக்கலாமே...
ஸ்ரீதேவி மரணத்தில் மர்மம்... பிரதமர் பெயரில் போலி கடிதம் தயாரித்த இளம்பெண்!
'லால் சலாம்' படத்தை வெளியிட தடை!?
கட்சியைக் கைப்பற்ற சாட்டை துரைமுருகன் திட்டம்... என்ஐஏ சோதனையில் வெளியான அதிர்ச்சி!
நடிகர் விஜயால் இத்தனை கோடி நஷ்டமா?: தீயாய் பரவும் தகவல்!
நடிகை ஜெயலட்சுமிக்கு கொலைமிரட்டல்... போலீஸில் பரபரப்பு புகார்!