டெல்லியில் 13 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கடும் குளிர்... மூடுபனியால் ஆரஞ்சு அலர்ட்!


டெல்லியில் நிலவும் அடர் பனி.

டெல்லியில் வெப்பநிலை இன்று காலை 4.8 டிகிரி செல்சியஸாக பதிவானது. இதனால் வானிலை ஆய்வு மையம் அங்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்துள்ளது.

பனி மூட்டத்தால் முகப்பு விளக்கை எரியவிட்டு செல்லும் வாகனங்கள்.

டெல்லியில் இன்று அதிகாலை குறைந்தபட்ச வெப்பநிலை 4.8 டிகிரி செல்சியஸாக பதிவானது. இதனால் கடும் குளிர், மூடுபனியை டெல்லி மக்கள் எதிர்கொண்டனர்.

இந்த வெப்பநிலையானது இந்த சீசனின் சராசரியை விட மூன்று புள்ளிகள் குறைவானதாகும் என டெல்லி வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அடர்த்தியான மூடுபனி காரணமாக அங்கு ஆரஞ்சு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

குறைந்த தெரிவுநிலை காரணமாக புது டெல்லியில் 24 ரயில்கள் தாமதமாக இயக்கப்பட்டன. டெல்லியின் இன்றைய அதிகபட்ச வெப்பநிலை 19 டிகிரி செல்சியஸாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டெல்லியில் கதகதப்பிற்கு நெருப்பு மூட்டும் தொழிலாளி

நடப்பு ஜனவரி மாதத்தில் இதுவரை 5 குளிர் அலை நாள்களை டெல்லி எதிர்கொண்டுள்ளது. இது கடந்த 13 ஆண்டுகளில் மிக அதிகம் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரிய தரவுகளின்படி, டெல்லியின் ஒட்டுமொத்த காற்றின் தரக் குறியீடு (ஏகியூஐ) காலை 9 மணி நிலவரப்படி 355 ஆக இருந்தது.

0 - 50 க்கு இடையில் காற்றின் தர அளவு இருந்தால் நல்லது. 51 முதல் 100 வரை இருந்தால் திருப்திகரமானது. 101 முதல் 200 வரை இருந்தால் மிதமானது. 201 முதல் 300 வரை மோசமானது. 301 முதல் 400 வரை மிகவும் மோசமானது. 401 முதல் 500 வரை கடுமையானதாக வரையறுக்கப்பட்டுள்ளது. இன்று காலை 8.30 மணிக்கு காற்றின் ஈரப்பதம் 97 சதவீதமாக இருந்தது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதையும் வாசிக்கலாமே...


தைப்பூச ஜோதி தரிசனம்... வடலூரில் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்!

அதிர்ச்சி... காதல் திருமணம் செய்த முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகனின் மருமகள் உயிரிழப்பு!

x