ஒருபக்கம் அதிர்ச்சி... மறுபக்கம் ஆச்சரியம்... சிவப்பு நிறத்தில் மாறிய கடல்


புதுச்சேரி கடல்பகுதியில் கடந்த இரண்டு நாட்களாக கடல் அலை சீற்றத்துடனும், கடல் கொந்தளிப்புடனும் காணப்பட்ட நிலையில் புதுச்சேரி தலைமைச் செயலகம் எதிரே உள்ள கடல் பகுதி காலை முதலே சிவப்பு நிறமாக காட்சி அளித்து வருவது பொதுமக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது.

புதுச்சேரி கடற்கரை

இந்த தகவல் புதுச்சேரி முழுவதும் வேகமாக பரவவே ஏராளமான சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொதுமக்கள் கடற்கரையில் குவிந்த வண்ணம் உள்ளனர். அவர்கள் கடலில் சிவப்பாக உள்ள பகுதிகளை வீடியோவாக பதிவு செய்தும் கடல் முன்பு நின்று செல்ஃபி எடுத்தும் ஆச்சரியத்துடன் பார்த்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

கடல் நிறம் திடீரென மாறி உள்ளதால் கடலில் இறங்கி நிற்கவோ குளிக்கவோ தடை செய்யப்பட்டுள்ளது. மேலும் கடற்கரைக்கு வரும் பொது மக்களை கண்காணிக்க போலீஸாரும் கடற்கரையில் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

புதுச்சேரியில் திடீரென்று கடல் பகுதி சிகப்பு நிறமாக மாறி காட்சியளிக்கும் சம்பவம் புதுச்சேரி மீனவர்கள் மற்றும் பொதுமக்கள் இடையே அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே சென்னை மெரினாவில் நேற்று சுழல் காற்று வீசிய நிலையில் இன்று கடல்நீறம் மாறி இருப்பது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதுத் தொடர்பாக அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.

இதையும் வாசிக்கலாமே...

அதிர்ச்சி... சென்னையில் டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வந்த சிறுவன் உயிரிழப்பு!

சோகம்... படகு கவிழ்ந்து விபத்து.. பலி எண்ணிக்கை 52 ஆக உயர்வு... 167 பேர் மாயம்!

x