குட்நியூஸ்... தமிழக அரசில் 368 காலிப்பணியிடங்கள்... உடனே விண்ணப்பிக்கவும்!


வேலைவாய்ப்பு

டிஎன்பிஎஸ்சி சார்பில் பொதுப்பணித்துறை, நீர்வளத்துறை, மாசு கட்டுப்பாட்டு வாரியம் என பல்வேறு துறைகளில் காலியாக உள்ள உதவி பொறியாளர் உள்பட வெவ்வேறு பதவிகளுக்கு 369 பேருக்கான ஆட்சேர்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு ஆணையம்

ஒருங்கிணைந்த பொறியியல் பணிகளில் அடங்கிய பதவிகளுக்கான காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான ஆள்சேர்க்கை அறிவிப்பை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் எதிர்வரும் நவம்பர் 11-ம் தேதிக்கு (11.11.2023) விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

தமிழ்நாடு அரசின் பொதுப்பணித் துறை, நீர்வளத் துறை, நெடுஞ்சாலைத் துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை என மொத்த 19 பதவி வகைமையின் கீழ் காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. ஒவ்வொரு காலியிடங்களுக்கான வயது வரம்பு, கல்வித் தகுதி, பதவி முன் அனுபவம், தேர்வு முறை, விண்ணப்பிக்கும் முறை ஆகியவை பணியாளர் தேர்வு அறிவிப்பில் (ரெக்ரூட்மெண்ட் நோட்டிஸ்) தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளன.

அறிவிக்கை

அறிவிக்கை

எனவே, விண்ணப்பிக்க விரும்புவோர், ஆட்சேர்க்கை அறிவிக்கையை பதிவிறக்கம் செய்து கவனமாக வாசிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். ஆன்லைன் எழுத்துத் தேர்வானது 2024 ஜனவரி மாத 6,7 ஆகிய தேதிகளில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், தகுதி பெறும் விண்ணப்பதாரர்கள் நேர்காணல் தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள்.

இருப்பினும், தாட்கோ நிறுவனத்தின்உதவி பொறியியாளர் (கட்டடவியல்) பதவிக்கு மட்டும் நேர்முக தேர்வு இல்லாமல் வெறும் எழுத்துத் தேர்வில் மட்டுமே சேர்க்கை நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மொத்தம் 450 மதிப்பெண்களுக்கு நடைபெறும் எழுத்துத் தேர்வு இரண்டு தாள்களைக் கொண்டது. தாள் I-ல் விண்ணப்பதாரர் இளநிலைப் பட்டம் பெற்ற பாடத்திட்டத்தில் இருந்து 300 கேள்விகள் இடம்பெறும். தாள்- II இரண்டு பகுதிகளைக் கொண்டது. பகுதி -அ- வில் கட்டாய தமிழ்மொழி தகுதித் தேர்வும் (10ம் வகுப்புத் தரம்) பகுதி -ஆ- வில் பொது அறிவு (பட்டப்படிப்புத் தரம்) கேள்விகளும் இடம்பெறும்.

விண்ணப்பக் கட்டணம் : பதிவுக் கட்டணம் : ரூ.150/ மற்றும் தேர்வுக் கட்டணம் : ரூ 200/

வயது வரம்பு: இந்த பதவிக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆதிதிராவிடர், ஆதிதிராவிடர் அருந்ததியினர், பட்டியல் பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் (முஸ்லிம்), மிகவும் பிற்படுத்தப்பட்டோர், ஆதரவற்ற விதவைகள் பிரிவினருக்கு வயது வரம்பு கிடையாது. ஏனையோர் 1.07.2023 அன்று, 32 வயதினை பூர்த்தி அடைந்திருக்க கூடாது.

விண்ணப்பம் செய்வது எப்படி? இணையவழி விண்ணப்பத்தை 11.11.2023 அன்று இரவு 11.59 மணி வரை விண்ணப்பிக்க இயலும், பின்னர் அச்சேவை நிறுத்தப்படும்.விண்ணப்பதாரர்கள் www.tnpsc.gov.in/ , tnpscexams.in ஆகிய இணையதளத்தின் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.

x