மேற்கு வங்க முன்னாள் முதலமைச்சர் புத்ததேவ் பட்டாச்சார்யா காலமானார்


மேற்கு வங்க முன்னாள் முதலமைச்சர் புத்ததேவ் பட்டாச்சார்யா இன்று காலமானார். அவருக்கு வயது 80.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், மேற்கு வங்க முன்னாள் முதலமைச்சருமான புத்ததேவ் பட்டாச்சார்யா கடந்த சில மாதங்களாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில் கொல்கத்தாவில் அவர் இன்று காலமானார் என்பதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முகமது சலீம் உறுதிப்படுத்தியுள்ளார்.

மேற்கு வங்காளத்தில் 34 ஆண்டுகால இடது முன்னணி ஆட்சியில், புத்ததேவ் ​​பட்டாச்சார்யா இரண்டாவது மற்றும் கடைசி முதலமைச்சராக இருந்தார், அவர் 2000 முதல் 2011-ம் ஆண்டு வரை தொடர்ந்து 11 ஆண்டுகள் முதலமைச்சர் பதவியில் இருந்தார். இவர் ஆட்சியின் போது மேற்கு வங்கத்தில் நிலம் கையப்படுத்த அவர் எடுத்த நடவடிக்கைக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது.

இதனால் ஏற்பட்ட போராட்டம் வன்முறையாக வெடித்தது. இதனால் 2011-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் புத்ததேவ் பட்டாச்சார்யா தோல்வியடைந்தார். இதன் விளைவாக உலகின் மிக நீண்டகாலம் தேர்தல் அரசியல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட மேற்கு வங்க இடதுமுன்னணியின் 34 ஆண்டுகால ஆட்சி வீழ்ந்தது.

x