ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை: ரிசர்வ் வங்கி முடிவு


புதுடெல்லி: இந்திய ரிசர்வ் வங்கியின் (ஆர்பிஐ) நிதிக் கொள்கைக் குழு (எம்பிசி) அதன் முக்கிய வட்டி விகிதமான ரெப்போ விகிதத்தை 6.5 சதவீதமாக தொடர முடிவு செய்துள்ளது. ஆர்பிஐ-ன் 6 பேர் கொண்ட நிதிக் கொள்கைக் குழு, தொடர்ந்து ஒன்பதாவது முறையாக ரெப்போ விகிதத்தை மாற்றாமல் தொடர்வது என முடிவு செய்துள்ளது.

இதுகுறித்து ரிசர்வ் வங்கியின் கவர்னர் சக்திகாந்ததாஸ் கூறுதையில், "வளர்ந்து வரும் மேக்ரோ பொருளாதாரம், நிதி நிலைமைகள் மற்றும் ஒட்டுமொத்த கண்ணோட்டம் ஆகியவைகளை தீவிரமாக ஆராய்ந்த பின்னர், எம்பிசி குழுவின் ஆறு உறுப்பினர்களில் 4:2 என்ற அடிப்படையில், ரெப்போ வட்டி விகிதத்தை மாற்றாமல் 6.5 சதவீதமாகவே தொடர்வது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.

நிதிக் கொள்கைக் குழு வளர்ச்சியை ஆதரிக்கும் அதே வேலையில் பணவீக்கத்ததைக் கட்டுப்படுத்தும் வகையில் பண விநியோகத்தை குறைப்பதில் (withdrawal of accommodation) கவனம் செலுத்தும்" என்று தெரிவித்தார்.

நிலையான வைப்பு வசதிக்கான வட்டி விகிதம் 6.25 சதவீதமாகவும், விளிம்பு நிலை வசதிக்கான வட்டி விகிதம் மாற்றம் இல்லாமல் 6.75 சதவீதமாக தொடரும்.

இதனிடையே, ரிசர்வ் வங்கி நிதியாண்டு 25-க்கான மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி)யை 7.2 சதவீதமாக கணித்துள்ளது. அதேநேரத்தில் நிதியாண்டுக்கான பணவீக்க முன்னறிவிப்பு 4.5 சதவீதமாக மதிப்பிடப்பட்டுள்ளது.

x