குடும்பத் தகராறில் கணவர் திட்டியதால் மூன்றாவது மாடியில் இருந்து இளம்பெண் குதித்து தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் தொடர்பான வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மத்தியப்பிரதேச மாநிலம், இந்தூரில் உள்ள லசுடியா காவல் நிலையத்திற்குட்பட்ட சிங்கப்பூர் டவுன்ஷிப் பகுதியில் இந்த சம்பவம், சனிக்கிழமையன்று நடைபெற்றுள்ளது. 27 வயதான அந்த பெண் எந்த வித பயமுமின்றி மூன்றாவது மாடியில் இருந்து குதிப்பது வீடியோவில் பதிவாகியுள்ளது. அப்போது ஒரு ஆண், அந்த பெண்ணின் பின்னால் வந்து அவளைத் தடுக்க முயற்சிக்கிறார். ஆனால், அவர் பேச்சைக் கேட்காத அந்த பெண் மூன்றாவது மாடியில் இருந்து குதித்துள்ளார். இதில் அந்த பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.
தற்கொலை செய்த இளம்பெண் அங்குரி பாய் என அடையாளம் காணப்பட்டுள்ளார். அவரது கணவர் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் அந்த பெண்ணைத் துன்புறுத்தியுள்ளார். இதன் காரணமாக அங்குரி பாய் தற்கொலை செய்து கொண்டது போலீஸ் விசாரணையில் தெரிய வந்ததுள்ளது. உயிரிழந்த அங்குரி பாய்க்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். அவரின் கணவர் ராகுல் லோதி, தனியார் நிறுவனத்தில் பணியாற்றுவதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. இந்த தற்கொலை சம்பந்தமாக அவரிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
#WATCH | Indore: 27-Year-Old Woman Jumps Off Third Floor After Fight With Husband At Singapore Township#MPNews #MadhyaPradesh pic.twitter.com/5nWoUF7WNf
— Free Press Madhya Pradesh (@FreePressMP) August 5, 2024