வயநாட்டில் 100 வீடுகளை கர்நாடக அரசு கட்டித்தரும்: முதல்வர் சித்தராமையா அறிவிப்பு


கர்நாடக முதல்வர் சித்தராமையா

பெங்களூரு: கேரள மாநிலம் வயநாட்டில் கடந்த மாதம் 30-ம் தேதி ஏற்பட்ட நிலச்சரிவில் அங்குள்ள மலை கிராமங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. 340-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ள நிலையில், ஆயிரக்கணக்கானோர் வீடுகளை இழந்துள்ளனர். இதை கேரள அரசு தேசிய பேரிடராக அறிவித்துள்ளது.

இந்நிலையில் கர்நாடக முதல்வர் சித்தராமையா தனது எக்ஸ் பக்கத்தில், ‘‘வயநாட்டில் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட‌ கேரள மக்களுக்கு ஆதரவாக கர்நாடக அரசு நிற்கிறது. பாதிக்கப்பட்டோருக்கு கர்நாடக அரசின் சார்பில் 100 வீடுகள் கட்டி தரப்படும் என கேரள முதல்வர் பினராயி விஜயனிடம் உறுதியளித்துள்ளேன்’’ என தெரிவித்துள்ளார். முன்னதாக எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் வயநாடு மக்களவைத் தொகுதி எம்.பி.யுமான ராகுல் காந்தி, காங்கிரஸ் சார்பில் 100 வீடுகள் கட்டி தரப்படும் என அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

x