பாரிஸ் போனாலும் இந்திய கலாச்சாரத்தை மறக்காத அம்பானி மருமகள்!


பாரிஸ்: பாரிஸில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டியைக் காண தொழிலதிபர் அம்பானியின் இளைய மருமகள் ராதிகா மெர்ச்சன்ட் வருகை தந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

இந்தியாவின் முன்னணி தொழிலதிபரான முகேஷ் அம்பானி - நீடா அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானிக்கும், ராதிகா மெர்ச்சன்டுக்கும் ஜூலை 12-ம் தேதி கோலாகலமாக திருமணம் நடைபெற்றது. இரண்டு நாட்கள் நடைபெற்ற இந்த திருமணக் கொண்டாட்டத்தில் பிரிட்டன் முன்னாள் பிரதமர் போரிஸ் ஜான்சன், ராஷ்டிரிய ஜனதா தளத்தின் தலைவர் லாலு பிரசாத் யாதவ், மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், நடிகர் ரஜினிகாந்த், இசையமைப்பாளர் ஏஆர் ரஹ்மான், கிரிக்கெட் வீரர் தோனி, நடிகர் சல்மான் கான், நடிகை பிரியங்கா சோப்ரா, பாடகர்கள் அடில், லானா டெல் ரே, டிரேக், கால்பந்து வீரர் டேவிட் பெக்காம், மல்யுத்த வீரர் ஜான் செனா, சவூதி அராம்கோ நிறுவனத்தின் சிஇஓ அமின் நாசர் உள்பட ஏராளமானோர் பங்கேற்றனர். இந்தத் திருமண நிகழ்வுக்கு ரூ.4,000 கோடி முதல் ரூ.5,000 கோடி வரையில் செலவிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது

இந்த நிலையில் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி உறுப்பினரும், ரிலையன்ஸ் அறக்கட்டளை தலைவருமான நீடா அம்பானி மற்றும் அவரது குடும்பத்தினர் ஒலிம்பிக் போட்டிகளைக் காண பாரிஸ் சென்றுள்ளனர். இந்த பயணத்தில் புதுமணத் தம்பதிகளான ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சன்ட் ஆகியோரும் இணைந்துள்ளனர். இதில் முகேஷ் அம்பானியின் அன்பு மருமகளை நெட்டிசன்கள் மிகவும் பாராட்டியுள்ளனர். இதற்குக் காரணம் பாரிஸில் மேற்கத்திய உடை அணிந்திருந்தாலும், ராதிகா மெர்ச்சன்ட் தாலிக்கு (மங்களசூத்திரம்) தனி மரியாதை கொடுத்துள்ளார் என்பது தான். அது தொடர்பான ராதிகாவின் புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த புகைப்படம் @ambani_update இன் Instagram கணக்கில் பகிரப்பட்டது மற்றும் பரவலாக பாராட்டப்பட்டது.

இந்து மத சாஸ்திரங்களின்படி, திருமணமான பெண்கள் கண்டிப்பாக தாலி அணிய அணிய வேண்டும். தற்போது தாலி அணிபவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு. ஆனால் பாரிஸ் நகரில் மேற்கத்திய உடை அணிந்திருந்தாலும் முகேஷ் அம்பானியின் இளைய மருமகள் ராதிகா மெர்ச்சன்ட் தாலி அணிந்து வந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.

x