யுபிஎஸ்சி தலைவராக ப்ரீத்தி சுதன் நியமனம்: ஆகஸ்ட் 1-ம் தேதி பதவியேற்கிறார்


டெல்லி: மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்தின் (யுபிஎஸ்சி) புதிய தலைவராக ப்ரீத்தி சுதன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவர் ஆகஸ்ட் 1-ம் தேதி பதவியேற்கிறார்.

மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்தின் தலைவராக இருந்த மனோஜ் சோனியின் பதவிக்காலம் முடிய ஐந்தாண்டுகள் இருந்த நிலையில், திடீரென சில நாட்களுக்கு முன் அவர் பதவியை ராஜினமா செய்தார். இந்த நிலையில் அவரது ராஜினாமா ஏற்றுக் கொள்ளப்பட்டதாகவும், யுபிஎஸ்சி தேர்வுக்குழு உறுப்பினராக இருக்கும் ப்ரீத்தி சுதனை அடுத்த தலைவராக நியமிக்க குடியரசு தலைவர் ஒப்புதல் அளித்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அவர் நாளை (ஆகஸ்ட் 1) முதல் மறு உத்தரவு வரும் வரை அல்லது 2025 ஜீன் 29-ம் தேதி வரை அவர் பதவி வகிப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் சுகாதார செயலாளராக இருந்த ப்ரீத்தி, கடந்த 2022-ம் ஆண்டு முதல் மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்தின் உறுப்பினராக உள்ளார். ஆந்திராவைச் சேர்ந்த ப்ரீத்தி பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை மற்றும் பாதுகாப்பு அமைச்சகத்திலும் பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.

x