கடந்த 5 ஆண்டுகளில் யானைகள் தாக்கி 2,829 பேர் உயிரிழப்பு


புதுடெல்லி: மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் மக்களவையில் உறுப்பினர் ஒருவரின் கேள்விக்கு அளித் துள்ள பதில் வருமாறு:

இந்தியாவில் கடந்த 5 ஆண்டுகளில் காட்டு யானைகள் தாக்கியதில் 2,829 பேர் இறந்துள்ளனர். ஒடிசா மாநிலத்தில் அதிகஅளவாக 624 பேர் இறந்து உள்ளனர். இதையடுத்து ஜார்க்கண்ட் (474), மேற்கு வங்கம் (436), அசாம் (383), சத்தீஸ்கர் (303), தமிழ்நாடு (256), கர்நாடகா (160), கேரளா (102) ஆகிய மாநிலங்கள் உள்ளன.

கடந்த 5 ஆண்டுகளில் மின்சாரம் பாய்ந்தது, ரயில் விபத்துகள், வேட்டையாடப்படுதல், விஷ உணவு உள்ளிட்ட இயற்கைக்கு மாறான காரணங்களால் 528 யானைகள் இறந்துள்ளன.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது

x