லக்னோ செல்லும் வழியில் செருப்பு தைக்கும் தொழிலாளியிடம் உரையாடிய ராகுல் காந்தி - வைரலாகும் வீடியோ


லக்னோ: எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, உத்தரப் பிரதேச மாநிலம் சுல்தான்பூர் நீதிமன்றத்துக்கு சென்றுவிட்டு லக்னோவுக்குத் திரும்பும் வழியில் ஒரு செருப்புத் தைக்கும் தொழிலாளியை சந்தித்து உரையாடிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

பாஜக முன்னாள் தேசிய தலைவராக அமித் ஷா இருந்தபோது, அவருக்கு எதிராக தெரிவிக்கப்பட்ட கருத்து தொடர்பாக உத்தரப் பிரதேச மாநிலம், சுல்தான்பூர் நீதிமன்றத்தில் ராகுல் காந்தி மீது அவதூறு வழக்கு தொடுக்கப்பட்டது. இந்த வழக்கில் ஆஜராக, தற்போதையை மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, நேற்று சுல்தான்பூர் சென்றார்.

நீதிமன்ற விசாரணை முடிவடைந்ததும், ராகுல் காந்தி லக்னோ நோக்கி புறப்பட்டார். அப்போது வழியில் சாலையோரத்தில் ஒரு செருப்பு தைக்கும் தொழிலாளியிடம் சென்று, ராகுல் காந்தி, தனது காலணியை தைத்து சரிசெய்து கொண்டார். அப்போது செருப்புத் தைக்கும் தொழிலாளி மற்றும் அவரது குடும்பத்தினருடன் ராகுல் காந்தி உரையாடினார்.

இது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் அதிகமாக பரவி வருகிறது. இது தொடர்பாக காங்கிரஸ் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி வழியில் காரை நிறுத்தி, செருப்பு தைக்கும் தொழிலாளி குடும்பத்தைச் சந்தித்தார்.

கடின உழைப்பாளிகளின் உரிமைகளுக்காக நாங்கள் தொடர்ந்து போராடுகிறோம். தெருக்களில் இருந்து நாடாளுமன்றம் வரை குரல் எழுப்புகிறோம். தற்போது அவர்களின் பாதுகாப்பையும் அவர்களின் எதிர்காலம் வளமாக இருப்பதையும் உறுதி செய்வதே எங்கள் நோக்கம்" என தெரிவித்துள்ளது.

x