சிக்கிம் எல்லையில் கொட்டும் பனி: மாரடைப்பால் ராணுவவீரர் உயிரிழப்பு


சிக்கிம்: பனிமூட்டமான எல்லைப் பகுதியில் பணியில் ஈடுபட்டிருந்த கர்நாடகாவைச் சேர்ந்த ராணுவவீரர் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடகா மாநிலம், பிதார் மாவட்டம், கமால்நகர் கோரியா கிராமத்தைச் சேர்ந்தவர் அனில்குமார் நவடே(40). இவர் கடந்த 20 ஆண்டுகளாக ராணுவத்தில் பணியாற்றி வந்தார். சிக்கிம் எல்லையில் பனிமூட்டமான பகுதியில் அனில்குமார் பணியில் தொடர்ந்து ஈடுபட்டிருந்தார்.

இந்த நிலையில் நேற்று இரவு திடீரென அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். அவரின் உடல் நாளை (ஜூன் 28) கர்நாடகா மாநிலத்தில் உள்ள சொந்த ஊருக்கு கொண்டு வரப்படும் என்று கூறப்படுகிறது. உயிரிழந்த ராணுவ வீரர் அனில்குமார் நவடேவிற்கு பெற்றோர், நான்கு சகோதரர்கள், மனைவி, மகன் மற்றும் மகள் உள்ளனர். கடந்த 2004-ம் ஆண்டு இந்திய ராணுவத்தில் அனில்குமார் சேர்ந்தார்.

x