முதல் முறையாக உக்ரைன் தலைநகருக்குச் செல்கிறார் பிரதமர் நரேந்திர மோடி!


டெல்லி: ரஷ்யாவைத் தொடர்ந்து போரினால் பாதிக்கப்பட்ட உக்ரைன் தலைநகர் கீவ்விற்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி முதல் முறையாக பயணம் செல்கிறார்.

மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு மூன்றாவது முறையாக இந்திய பிரதமராக நரேந்திர மோடி தேர்ந்தெடுக்கப்பட்ட நாளில், போரினால் பாதிக்கப்பட்ட தங்கள் நாட்டிற்கு வருமாறு உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலென்ஸ்கி அழைப்பு விடுத்திருந்தார். இதனையேற்று 2022-ல் உக்ரைன் மீது ரஷ்யா படையெடுத்த பிறகு, பிரதமர் நரேந்திர மோடி ஆகஸ்ட் மாதம் உக்ரைன் தலைநகர் கீவ்விற்கு செல்கிறார். இங்கு அவர் செல்வது இதுவே முதல் முறையாகும்.

முன்னதாக மார்ச் மாதம் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கியுடன் தொலைபேசியில் பேசிய பிரதமர் மோடி, இந்தியா-உக்ரைன் உறவுகளை மேலும் வலுப்படுத்துவது குறித்து விவாதித்தார். ரஷ்யா - உக்ரைன் மோதலைத் தீர்க்க பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று அவர் அழைப்பு விடுத்தார். ரஷ்யா - உக்ரைன் மோதலைத் தீர்க்க பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று அவர் அழைப்பு விடுத்தார்.

இந்த மாத தொடக்கத்தில் இரண்டு நாள் பயணமாக ரஷ்யா சென்ற பிரதமர் மோடி, அணுசக்தி, கப்பல் கட்டுதல் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பை அதிகரிப்பது குறித்து பேசினார். ரஷ்யாவுக்கும், இந்தியாவுக்கும் இடையிலான ஒத்துழைப்புக்கான தெளிவான கட்டமைப்பை உருவாக்குவதில் மோடியின் பங்களிப்பை ரஷ்ய அதிபர் புதின் பாராட்டினார். இந்நிலையில் இன்னும் சில நாட்களில் உக்ரைனுக்கு மோடி பயணம் மேற்கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

x