அடுக்குமாடி குடியிருப்புகளில் நாய்கள் வளர்க்க தடையில்லை: மாநகராட்சி முடிவு


பெங்களூரு: அடுக்குமாடி குடியிருப்புகளில் செல்லப்பிராணிகளை வளர்க்க தடை விதிக்க முடியாது என்று பெங்களூரு மாநகராட்சி(பிபிஎம்பி) தெரிவித்துள்ளது.

பெங்களூரு மாநகராட்சி, நாய் பிரியர்கள் உள்பட செல்லப்பிராணிகளை வளர்ப்பவர்களுக்கு நற்செய்தியை வழங்கியுள்ளது. வீட்டு வசதி சங்கங்கள் இனி எந்தவிதமான செல்லப்பிராணிகளையும் தடை செய்ய முடியாது என்று தெரிவித்துள்ளது. மேலும், செல்லப்பிராணிகளுக்கு உணவளிக்கும் அமைப்புகளுக்கு புதிய வழிகாட்டுதல்களையும் பிபிஎம்பி வெளியிட்டுள்ளது.

அது வெளியிட்டுள்ள உத்தரவில், குடிமை அமைப்பு வழங்கிய வழிகாட்டுதல்களில், செல்லப்பிராணிகள் மீதான வீட்டு வசதி சங்கங்களின் நடத்தை கண்டிப்பாக கண்காணிக்கப்படும். செல்லப்பிராணிகள் தொடர்பான வீட்டு வசதி சங்கங்களின் துணை விதிகளை மறுஆய்வு செய்யவும், வீட்டுவசதி சங்கத்திற்குள் விலங்குகளின் இருப்புக்கு தீங்கு விளைவிக்கக் கூடாது என்பதை உறுதிப்படுத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் செல்லப்பிராணிகளை பொதுவான பகுதிகளில் அனுமதிக்க வேண்டும் என்றும், லிப்ட்களில் பயணிக்கும் போது முகமூடிகள் கட்டாயம் இல்லை என்றும் கூறியுள்ளது.

இது தவிர, நாய்களை குச்சியால் அடிப்பது சட்டவிரோத செயலாக கருதப்படும் என்றும், அனைத்து பொது பூங்காக்கள், தொழில்நுட்ப பூங்காக்கள் மற்றும் பிற நிறுவனங்கள் தங்கள் வளாகத்தில் செல்லப்பிராணிகளை நடத்துவதை கண்காணிக்க சம்பந்தப்பட்டவர்களுக்கு உத்தரவிட வேண்டும் என்றும் பிபிஎம்பி உத்தரவிட்டுள்ளது.

தெருநாய்களுக்கு உணவளிப்பவர்கள் இறைச்சி மற்றும் சர்க்கரை பிஸ்கட்களைத் தவிர்க்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர். அத்துடன் இரவு 11 மணி முதல் காலை 5 மணி வரை உணவளிக்க வேண்டாம் என்றும், மக்கள் நடமாட்டம் அதிகமாக இருக்கும்போது உணவு வழங்கக்கூடாது என்றும் பிபிஎம்பி உத்தரவிட்டுள்ளது.

x