பிஹார், ராஜஸ்தான் மாநில பாஜகவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்!


புதுடெல்லி: பிஹார், ராஜஸ்தானுக்கு புதிய மாநில தலைவர்களை பாஜக நியமித்துள்ளது. ராஜஸ்தான் மாநில தலைவராக ராஜ்யசபா எம்.பி- மதன் ரத்தோர் நியமிக்கப்பட்டுள்ளார். பிஹார் மாநில தலைவராக திலீப் ஜெய்ஸ்வால் நியமிக்கப்பட்டுள்ளார்.

பிஹாரில் வருவாய்த்துறை நில சீர்திருத்த அமைச்சராக இருக்கும் திலீப் ஜெய்ஸ்வால், 20 ஆண்டுகளாக கட்சியின் மாநில பொருளாளராகவும் இருந்துள்ளார். மேலும், இவர் சிக்கிம் பாஜகவின் பொறுப்பாளராகவும், கிஷன்கஞ்சில் உள்ள மாதா குஜ்ரி நினைவு மருத்துவக் கல்லூரியின் நிர்வாக இயக்குநராகவும் உள்ளார்.

ராஜஸ்தான் பாஜக தலைவராக மாநிலங்களவை உறுப்பினர் மதன் ரத்தோர் நியமிக்கப்பட்டுள்ளார். அசாம் மாநிலத்துக்கு ஹரிஷ் திவேதி, சண்டீகருக்கு எம்.பி- அதுல் கர்க், லட்சத்தீவு மற்றும் தமிழ்நாட்டிற்கு அரவிந்த் மேனன், ராஜஸ்தானுக்கு ராதா மோகன் தாஸ் அகர்வால் மற்றும் திரிபுராவுக்கு டாக்டர் ராஜ்தீப் ராய் ஆகிய 6 மாநிலங்களுக்கான பொறுப்பாளர்களையும் பாஜக மேலிடம் நியமித்துள்ளது.

x