இளநீர், ஜூஸ், குளிர்பானங்களை ஸ்ட்ரா போட்டு குடிப்பதால் ஆபத்து!


சென்னை: இளநீர், ஜூஸ், குளிர்பானங்களை ஸ்ட்ரா போட்டு குடிப்பதால் இரைப்பை பிரச்சினைகள் அதிகரிக்கும் என்று சுகாதார நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

சாலையோர இளநீர் கடை முதல், பெரிய ஸ்டார் ஹோட்டல் வரை குளிர்பானங்களைக் குடிக்க ஸ்ட்ரா தான் வழங்கப்படுகிறது. இந்த ஸ்ட்ரா போட்டு இளநீர், ஜூஸ், குளிர்பானங்களைக் குடிப்பதால் ஏற்படும் ஆபத்துக்களை மக்கள் உணராமல் இருக்கின்றனர் என்று சுகாதார நிபுணர்கள் கவலைப்படுகின்றனர்..

இது தொடர்பாக அவர்கள் கூறுகையில்," இளநீர், ஜூஸ், குளிர்பானங்களை ஸ்ட்ரா போட்டு குடிப்பதால் இரைப்பை பிரச்சினைகள் அதிகரிக்கும். இப்படி ஸ்ட்ரா மூலம் இளநீரையோ, குளிர்பானங்களையோ குடிக்கும்போது, ​​அதிகப்படியான காற்று வயிற்றில் உறிஞ்சப்படுகிறது. இதன் விளைவாக, இரைப்பை பிரச்சினை உள்ளவர்களுக்கு மேலும் அந்த பிரச்சினை தீவிரமாகும். அத்துடன் செரிமான பிரச்சினைகளும் ஏற்படலாம்.

பிளாஸ்டிக்கால் உருவாக்கப்பட்ட ஸ்ட்ரா மூலம் சரும நோய்களும் வரும். ஏனெனில், ஒவ்வொரு முறை குடிக்கும்போதும் வாயின் தசைகள் கூடுதல் அழுத்தத்திற்கு உள்ளாகின்றன. இந்த அழுத்தம் தொடர்ந்தால், முகத்தில் சுருக்கங்கள் தோன்றும். இதனால் இளமையிலேயே வயதானவர்கள் தோற்றம் ஏற்படும். ஸ்ட்ரா இல்லாமல் டம்ளரில் குடிப்பதால் பற்கள் சுத்தமாகி, வாயில் உள்ள பாக்டீரியாக்களைச் சுத்தமாக வைத்திருக்கும்.

மேலும், ஸ்ட்ரா மூலம் இனிப்பு அல்லது குளிர்பானங்களை வழக்கமாக உட்கொள்வது வாய் புற்றுநோயை உருவாக்கும். பற்களில், வாயின் உள்ளே இருக்கும் சில இடங்களில் சர்க்கரையின் திரட்சியால் பல் சொத்தை ஏற்படும். மேலும், ஸ்ட்ராவால் குடிக்கும் போது பிளாஸ்டிக் நுண்ணிய துகள்கள் கூட குளிர்பானத்தில் சேரும் அபாயம் உள்ளது. இது மிகவும் ஆபத்தானது. இதனால் பிளாஸ்டிக்கின் சிறு துகள்கள் வயிற்றுக்குள் நுழைந்து தீவிர நோய்க்கு வழிவகுக்கும். எனவே, பிளாஸ்டிக் ஸ்ட்ரா மூலம் இளநீர், ஜூஸ், குளிர்பானங்களைக் குடிப்பதை தவிர்ப்பது நல்லது" என்றனர்.

x