ஹரியாணா வெள்ளத்தில் மிதந்த சொகுசு கார்கள்: வைரலாகும் வீடியோ


ஹரியாணா மாநிலம் குருகிராமில் பெய்த கனமழையில் இரண்டு சொகுசு கார்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லும் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

ஹரியாணா மாநிலம், குருகிராமில் நேற்று 2 மணி நேரமாக கனமழை பெய்தது. இதனால் அந்த பகுதி முழுவதும் வெள்ளத்தில் மூழ்கியது. அப்பகுதியில் வசிக்கும் ஒருவரின் விலை உயர்ந்த சொகுசு கார்கள் இரண்டு வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. இந்த வீடியோ தற்போது இன்ஸ்டாகிராமில் வைரலாகி வருகிறது.

இதுதொடர்பாக கார்களின் சொந்தக்காரரின் குரலில் பதிவு செய்யப்பட்டுள்ள அந்த வீடியோவில், “இது மும்பை அல்லது பெங்களூரு அல்ல, இந்தியாவின் மெட்ரோ நகரமான குருகிராமிற்கு வரவேற்கிறேன். என்னுடைய பிஎம்டபிள்யூ, மெர்சிடிஸ் பென்ஸ் கார்கள் வெள்ளத்தில் போய்விட்டன. இந்த நிலைமையை சரிசெய்ய இதுவரை எந்த அதிகாரிகளும் முன்வரவில்லை, இதனால் மிகுந்த மனவேதனை அடைந்துள்ளேன். இந்த ஆழமான தண்ணீருக்குள் நுழைய எந்த கிரேனும் வராது. ஆனாலும், கிரேன் வரவழைக்க முயற்சித்தேன்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

இந்த வீடியோவுக்கு நெட்டிசன்கள் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். ஒரு நெட்டிசன், “இப்போது ஹெலிகாப்டர் வாங்குவதற்கான நேரம் வந்துவிட்டது” என்றும், மற்றொரு நெட்டிசன் “ மழைக்காலத்திற்கு படகு வாங்க வேண்டும்” என்று கூறியுள்ளனர். மற்றொருவர் “உள்ளூர் மாநகராட்சி விரைவில் இதனை சரி செய்ய வேண்டும்” என்று பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ இன்ஸ்டகிராமில் நேற்று பகிரப்பட்ட நிலையில், 27 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளையும், 1 லட்சத்திற்கும் அதிகமான லைக்குகளையும் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

x