சாத்தூர் அருகே பட்டாசு ஆலை விபத்துகளில் பலியானோர் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்தது.
விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகே கனஞ்சாம்பட்டி பட்டாசு ஆலையில் ஜன.19-ல் வெடி விபத்து ஏற்பட்டது. இதில் சாத்தூரைச் சேர்ந்த முனீஸ்வரி, சங்கர் ஆகியோர் உயிரிழந்தனர்.
படுகாயமடைந்த 9 பெண்கள் உள்பட 25 பேர் சாத்தூர், சிவகாசி, மதுரை அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தாயில்பட்டியைச் சேர்ந்த மாரியப்பன் (54) நேற்று இறந்தார். இந்நிலையில் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கருப்பசாமி (26) சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார். இதேபோல், சாத்தூர் அருகே சிவசங்குபட்டி பட்டாசு ஆலையில் ஜன.14-ல் வெடிவிபத்து ஏற்பட்டது.
இதில் காயமடைந்து மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சையிலிருந்த மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த ராம்பால் (25), சந்தீப்கோல் ( 20) ஆகியோரும் உயிரிழந்தனர். இவ்விரு சம்பவங்களில் உயிரிழந்தோர் எண்ணிக்கை தற்போது 6 ஆக உயர்ந்துள்ளது.