நேபாளத்தில் புறப்படும் போது விபத்தில் சிக்கிய விமானம்: 5 பேர் உயிரிழப்பு!


நேபாளத்தின் காத்மாண்டுவில் 19 பயணிகளுடன் சென்ற விமானம் புறப்படும் போது விபத்துக்குள்ளானது. இதில் 5 பேர் பலியானார்கள். இது தொடர்பான வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நேபாளத்தில் உள்ள காத்மாண்டுவில் உள்ள திரிபுவன் சர்வதேச விமான நிலையத்தில் இன்று காலை 19 பேருடன் தனியார் விமான நிறுவனத்திற்கு சொந்தமான விமானம் புறப்படும் போது விபத்துக்குள்ளானது. ஓடுபாதையில் இருந்து கிளம்பும் போது இந்த விமானம் ஓடுபாதையில் சறுக்கி விபத்திற்குள்ளானது. அப்போது விமானம் தீப்பிடித்ததாக கூறப்படுகிறது. விமானத்தில் 19 பேர் இருந்தனர். இவர்கள் அனைவரும் தொழில்நுட்ப குழுவைச் சேர்ந்தவர்கள் என்றும் கூறப்படுகிறது.

விபத்துக்குப் பிறகு விமானத்தில் இருந்து புகை வந்ததாக திரிபுவன் சர்வதேச விமான நிலைய தகவல் அதிகாரி ஞானேந்திர புல் கூறியதாக காத்மாண்டு போஸ்ட் செய்தி வெளியிட்டுள்ளது. தீயணைப்பு வீரர்கள் மற்றும் பாதுகாப்புப் படையினர் விபத்து நடந்த இடத்தில் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். .விமானத்தில் பயணம் செய்த 5 பேர் பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் பலர் உயிரிழக்க வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது.

இதுகுறித்து டிஐஏ செய்தித் தொடர்பாளர் பிரேம்நாத் தாக்கூர் கூறுகையில், காலை 11 மணியளவில் விபத்துக்குள்ளான போக்ரா விமானத்தில் 19 பேர் இருந்தனர். விபத்து நடந்த இடத்தில் போலீஸார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர் என்றார். இந்த விபத்து காரணமாக காத்மாண்டு விமான நிலையம் தற்காலிமாக மூடப்பட்டுள்ளது.

x